விழித்திரு இசை விழாவில் டி.ஆர் செய்தது சரியா? - ரசிகர்கள் சொல்வது என்ன?

Bookmark and Share

விழித்திரு இசை விழாவில் டி.ஆர் செய்தது சரியா? - ரசிகர்கள் சொல்வது என்ன?

கிருஷ்ணா, வித்தார்த், தன்ஷிகா என பலர் நடித்துள்ள விழித்திரு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது, இதில் படக்குழுவினர், டி.ராஜேந்தர், வெங்கட் பிரபு என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தன்ஷிகா பேசும் போது அனைவருக்கும் நன்றி கூறி வந்தார், ஆனால் டி.ஆர் பெயரை கூற மறந்து விட்டார்.

இதை பெரிய விஷயமாக எடுத்து கொண்டு டி.ஆர் பொது மேடையிலேயே தன்ஷிகாவை மேடை நாகரிகம் தெரியாத பெண், நீ கட்டிட்டு வரல சேரி இப்போ எதுக்கு சொல்ற சாரி என அடுக்கு மொழிகளில் அவரை விமர்சித்து கண் கலங்க வைத்தார்.

இதனால் தன்ஷிகா மனமுடைந்து அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும் விடமால் விமர்சித்தார், இதனை அடுத்து மேடையில் இருந்த ஒவ்வொருவரையும் கலாய்ப்பது போல அவரவர்களின் குறைகளை விமர்சித்து பேசினார்.

இதை மேடையில் இருந்தவர்களும் சீனியர் நடிகர் என்பதால் எதிர்த்து பேச முடியாமல் சிரித்து கொண்டே தங்களது வலிகளை மனதிற்குள்ளேயே போட்டு புதைத்து கொண்டனர்.
இது பற்றிய இணையதள நெட்டிசன்கள், ஒரு சீனியர் நடிகர் ஒரு பெண்ணை மேடை நாகரிகம் தெரியவில்லை என நாகரிகம் இல்லாமல் மேடையில் விமர்சித்து கண் கலங்க வைத்தது சரியா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் அங்கு மேடையில் இருந்த அனைவருமே டி.ஆரை பார்த்து வளர்ந்தவர்கள் என்பதாலே எதிர்த்து பேச முடியாமல் சிரித்து கொண்டே மௌனத்தை கடைபிடித்ததாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions