கிருத்திகா இயக்கத்தில் சிம்பு?

Bookmark and Share

கிருத்திகா இயக்கத்தில் சிம்பு?

'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி அதன் பின் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பே அவர் விரைவில் ஒரு படத்தை இயக்க ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது சிம்பு நாயகனாக நடிக்க அனிருத் இசையமைக்க, கிருத்திகா இயக்க உருவாகப் போகும் ஒரு படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

'வணக்கம் சென்னை' படத்திற்கே அனிருத் தான் இசையமைத்திருந்தார். பெரிய அளவில் அந்தப் படம் வெற்றி பெறவில்லையென்றாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து. ஒரு கலகலப்பான காதல் படமாக அந்தப் படத்தை இயக்கியிருந்தார் கிருத்திகா.

சிம்பு நடித்து தற்போது “இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா” ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. 'வாலு' படம் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் செல்வராகவன் இயக்கும் படம் ஒன்றில் சிம்பு நடிக்கப் போகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கிருத்திகா, சிம்பு, அனிருத் இணையும் புதிய படம் ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions