காதல் தோல்வியில் இன்னொரு ஹீரோயின்

Bookmark and Share

காதல் தோல்வியில் இன்னொரு ஹீரோயின்

நயன்தாரா, சமந்தா பாணியில் காதல் தோல்விக்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தும் நடிகை பற்றி தகவல் வெளியாகி உள்ளது. மகேஷ்பாபு நடித்த நேனொகடய்னே தெலுங்கு படத்தில் நடித்தபோது கடற்கரையில் ஹீரோ பின்னால் ஹீரோயின் மண்டியிட்டு செல்வதுபோல் அமைக்கப்பட்ட காட்சிக்கு கண்டனம் தெரிவித்திருந்தார் சமந்தா.

இதனால் மகேஷ் பாபு, சமந்தா ரசிகர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இன்றும் அது தொடர்கிறது. மண்டியிட்டு செல்வது போல் நடித்த அந்த நடிகை, கீர்த்தி சனோன். பாலிவுட்டில் இப்போது அவர் பிசியாகிவிட்டார்.

இந்நிலையில் அனுஷ்கா நடிக்கும் ‘சைஸ் சீரோ’ படத்தில் நடிக்க உள்ளார் கீர்த்தி. இவர் காதல் தோல்வி அடைந்த விவகாரம் பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி கீர்த்தி சனோன் கூறும்போது,

‘எனக்கும் ஒருவருடன் காதல் இருந்தது. ஆனால் அது நீண்ட நாட்களுக்கு முன்னரே முறிந்துவிட்டது. அதிலிருந்து நானும் வெளியில் வந்துவிட்டேன். இப்போது எனக்காகவும் மற்றவர்களுக்காகவும் என்னிடம் நிறைய நேரம் இருக்கிறது.

மீண்டும் காதல் மலருமா என்ற பேச்சுக்கே இடமில்லை. காரணம் நான் நடிப்பு வேலையில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறேன்’ என்றார். 


Post your comment





Related News
இரண்டு முறை மயங்கி விழுந்த ஜீ.வி.பிரகாஷ் பட ஹீரோயின்! படப்பிடிப்பில் பரபரப்பு
யாரோ என்னை சிக்க வைத்துள்ளனர்- கோபத்தில் கொந்தளிக்கும் க்ரீத்தி சனான்
சல்மான் ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்!
டோலிவுட்டில் சற்று வித்தியாசமான இளம் நடிகை
வருண் தவான் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சனோன்!
இது வழக்கமான தெலுங்கு படம் அல்ல...!
ராதிகா ஆப்தேவை மறைமுகமாக தாக்கிய கீர்த்தி சனோன்
கல்லூரி வகுப்புகளைக் கட் அடிக்கும் கிரித்தி சனோன்
எமியை வாழ்த்திய கிருத்தி சனோன்!
விமான நிலையத்தில் கன்னட நடிகை மானபங்கம் அதிகாரிகள் மீது புகார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions