ஜூலை 20-ந்தேதி கே.எஸ்.ரவிக்குமார் படம் தொடங்குகிறது!

Bookmark and Share

ஜூலை 20-ந்தேதி கே.எஸ்.ரவிக்குமார் படம் தொடங்குகிறது!

கமல் பத்து வேடங்களில் நடித்த தசாவதாரம் படம்தான் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடைசியாக வெற்றி பெற்ற படம். அதன்பிறகு அவர் ஆதவன், மன்மதன் அம்பு, போலீஸ் கிரி, லிங்கா என முன்னணி ஹீரோக்களை வைத்து சில படங்கள் இயக்கியபோதும் அவை எதுவுமே பெரிதாக ஓடவில்லை.

இதில் ரஜினியை வைத்து அவர் இயக்கிய லிங்கா விநியோகஸ்தர்கள் பிரச்சினையில் சிக்கி ரஜினியை பெரிய டென்சன் செய்தது. அதனால் அது ரவிக்குமாரையும் பாதித்தது.

இருப்பினும் உடனடியாக படம் இயக்குவதில் இறங்காமல் தனுஷ் நாயகனாக நடித்துள்ள விஐபி-2 படத்தில் அவருக்கு அப்பா வேடத்தில் நடித்து வந்த அவர், தற்போது நான் ஈ சுதீப்பைக்கொண்டு இயக்கும் படவேலைகளில் இறங்கியிருக்கிறார்.

இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகை தேர்வினை கடந்த சில மாதங்களாக அவ்வப்போது ஆடிசன் வைத்து செலக்ட் பண்ணிவந்த கே.எஸ்.ரவிக்குமார், இம்மாதம் 10-ந்தேதியும் ஒரு ஆடிசன் நடத்தினார்.

இந்நிலையில், வருகிற 18-ந்தேதி கடைசியாக ஒரு ஆடிசன் நடத்தி விட்டு 20-ந்தேதியில் இருந்து படப்பிடிப்பை தொடங்குகிறார். அதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions