முதல்வருடன் திரைப்பட இயக்குநர் சங்கத்தினர் சந்திப்பு!

Bookmark and Share

முதல்வருடன் திரைப்பட இயக்குநர் சங்கத்தினர் சந்திப்பு!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரபல இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் 62 பேர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 64 பேர் இறந்தபின் எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும் எந்த பயனும் இல்லாமல் போகும் உடலை மருத்துவ ஆய்வுக்கு பயன்படுத்தி பல நோய்களை குணமாக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனும்,

உடல் தானத்தில் நமது தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ வேண்டுமென்ற பேராவலுடனும், மரணத்திற்கு பின் அரசு பொது மருத்துவமனைக்கு அவர்களது உடலை தானமாக கொடுப்பதற்கு முன்வந்து, அதற்கான உறுதிப் பத்திரங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிடம் அளித்து, வாழ்த்து பெற வேண்டும் என்ற மனுவினை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன் வழங்கினார்.

அதன்படி, முதல்– அமைச்சர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன், துணைத் தலைவர்கள் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.வாசு, பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சந்தித்து, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த 64 பேர்களின் தன்னார்வ உடல் தானத்திற்கான உறுதிப் பத்திரங்களை வழங்கி, வாழ்த்து பெற்றனர்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions