பிஸியான கே.எஸ்.ரவிக்குமார்!

Bookmark and Share

பிஸியான கே.எஸ்.ரவிக்குமார்!

லிங்கா படத்தின் விநியோகஸ்தர்கள். பிரச்சினையால் இனி படமே இயக்கமாட்டேன் என்று கே.எஸ். ரவிக்குமார் சொன்னதாக செய்திகள் வந்தன. அது சிறகு முளைத்த வதந்தி என்று இப்போது நிரூபிக்கப்பட்டு உள்ளது.

ஏனென்றால் ரவிக்குமார் இப்போது ஒரு கன்னடப்படம் இயக்குகிறார். நான் ஈ வில்லன் சுதீப்தான் கதாநாயகன் கதாநாயகி இன்னமும் இறுதியாக வில்லை டி.இமான் இசையமைக்கிறார்.

இது முன்பே திட்டமிடப்பட்டதாம், இடையில் அவசரமாகச் செய்ய வேண்டுமென்று லிங்கா படம் குறுக்கிட்டதால் இப்படம் தாமதமானதாம்.  சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் படப்பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்பட்டு உள்ளது.

இது ஒரு ஆக்ஷன் படமாகும்..திகில், காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் எல்லாமே  கலந்த பக்கா கமர்ஷியல் கொத்து பரோட்டடாவாக இந்தப்படம் இருக்குமாம். முதலில் கன்னடம், தமிழ் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தெலுங்கிலும் உருவாகலாம். கதாநாயகியாக நடிக்க அனுஷ்கா சமந்தா, தமன்னா, ஹன்சிகா போன்ற சிலர் பரிசீலனையில் உள்ளனர். கதாநாயகி முடிவானதும் தெலுங்கிலும் வடிவம் பெறும் என்கிறார்கள்.

இது தவிர இன்னொரு படத்தின் விவாதமும் போய்க் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்ல தனுஷ் நடிக்கும் வேல்ராஜ் இயக்கும் புதிய படத்திலும் தனுஷின் அப்பாவாக ரவிக்குமார் தான் நடிக்கிறார். ஆக ரவிக்குமார் எப்போதும் பிஸியாகத்தான் இருக்கிறார்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions