கே.எஸ்.ரவிக்குமாரின் பெங்களூர் செண்டிமென்ட்!

Bookmark and Share

கே.எஸ்.ரவிக்குமாரின் பெங்களூர் செண்டிமென்ட்!

லிங்கா படத்தை அடுத்து கன்னட நடிகர் சுதீப்பை வைத்து ஒரு படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த மாதம் 20-ம் தேதியில் இருந்தே நடத்துவதென்று திட்டமிட்டிருந்தார் அவர். ஆனால், ஒரு கன்னட படத்தின் இறுதிகட்டத்தில் இருக்கும் சுதீப், அந்த படத்தை முடித்து விட்டு வருவதாக கூறியதை அடுத்து அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்குகிறாராம் ரவிக்குமார்.

மேலும், தான் இயக்கும் அனைத்து படங்களின் படப்பிடிப்பையும் ஒரு பத்து நாளாவது பெங்களூரில் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ரவிக்குமார், சுதீப் நடிக்கும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை பெங்களூரில்தான் நடத்தப்போகிறாராம். இதற்கு முக்கிய காரணம், அந்த படத்திற்கு தேவையான பல முக்கிய லொகேசன்களை சுதீப்பே ரெடி பண்ணிக்கொடுக்கிறாராம்.

அதோடு, அந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது, தான் சில கன்னட படங்களின் டப்பிங் உள்ளிட்ட இறுதிகட்ட வேலைகளையும் அங்கிருந்தபடியே முடித்துக்கொடுக்க வேண்டும் என்பதும் சுதீப்பின் திட்டமாக உள்ளதாம்.

அதனால் அவரது விருப்பத்துக்கே பெங்களூரில் பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்த இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், சுதீப்பிற்காக இல்லையென்றாலும் தனது செண்டிமென்ட் ஏரியாவும் பெங்களூர்தான் என்பதால் அதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லையாம்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions