பிரபல காமெடி நடிகர் குமரிமுத்து சென்னையில் காலமானார்

Bookmark and Share

பிரபல காமெடி நடிகர் குமரிமுத்து சென்னையில் காலமானார்

‘ஊமை விழிகள்’, ‘முள்ளும் மலரும்’, ‘பொங்கி வரும் காவேரி’, ‘இது நம்ம ஆளு’, ‘புது வசந்தம்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் குமரி முத்து. 

சினிமாவில் இவருடைய சிரிப்புதான் மிகப்பெரிய பிரபலம். இவரின் வித்தியாசமான சிரிப்பு அனைவரையும் பயமுறுத்துவது மட்டுமில்லாமல் ரசிக்கவும் வைக்கும். 

சினிமாவில் புகழ்பெற்ற நட்சத்திமாக திகழ்ந்த குமரி முத்து, அரசியல் கட்சியான திமுகவில் இணைந்து நட்சத்திர பேச்சாளராகவும் திகழ்ந்து வந்தார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த குமரி முத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குமரி முத்துவுக்கு வயது 77. மறைந்த குமரி முத்துவின் உடலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் ஆழந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.


Post your comment





Related News
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கிய நடிகை விஜயகுமாரி!
குமரிமுத்துவின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்
குமரிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!
குமரிமுத்து நீக்கம் செல்லாது என கோர்ட் உத்தரவு!
நடிகர் சங்கத்தில் இருந்து குமரிமுத்துவை நீக்க இடைக்கால தடை
கலைஞர் விருது கிடைத்தது என் பிறவிப் பயன்... நடிகர் குமரிமுத்து பெருமிதம்
திமுகவின் முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு! நடிகர் குமரிமுத்துவுக்கு கலைஞர் விருது!!
பழம் பெரும் நடிகை சுகுமாரி மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்!
தமிழ் ஜாம்பவான்களுடன் நடித்த பழம் பெரும் நடிகை சுகுமாரி காலமானார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions