குமரிமுத்து நீக்கம் செல்லாது என கோர்ட் உத்தரவு!

Bookmark and Share

குமரிமுத்து நீக்கம் செல்லாது என கோர்ட் உத்தரவு!

நடிகர் சங்கத்திலிருந்து குமரிமுத்துவை நீக்கியது செல்லாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கட்டடம் தொடர்பாக சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது கடுமையான குற்றம் சாட்டினார் நடிகர் குமரிமுத்து. இதுதொடர்பாக இவர்களுக்கு கடந்த காலங்களில் பெரும் பிரச்னை ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் குமரிமுத்துவை நடிகர் சங்கத்தில் நீக்க உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து குமரிமுத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குமரிமுத்து மீதான தடையை நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions