வருகிறது மற்றுமொரு கும்கி

Bookmark and Share

வருகிறது மற்றுமொரு கும்கி

பிரபு சாலமன் இயக்கிய கும்கி படம் யானைக்கும், மனிதனுக்குமான உறவை சொன்னது. அதே பாணியில் இப்போது பீடி என்ற படம் உருவாகி இருக்கிறது. ஜெயராம் புரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் ஜெ.சண்முகம் தயாரித்திருக்கிறார். ஸ்மித்குமார் இயக்கி உள்ளார். உத்பல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

கணேஷ் ராகவேந்திரா இயக்கி உள்ளார். "கும்கி படத்தின் சாயல் இருந்தாலும், அந்த கதைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. மலைவாழ் மக்களின் மலைகிராமம் ஒன்றில் டீக்கடை நடத்தி வரும் ஹீரோவின் வாழ்க்கையில், வழி தவறி ஒரு யானைக்குட்டி வந்து சேர்கிறது.

அதன் மீது அன்பு செலுத்துகிறான் ஹீரோ. அதனை சுதந்திரமா காட்டுக்குள் அலையவிட்டு வளர்க்கிறான். ஆனால் இந்த சமூகமும், அரசும் அவனையும், யானையையும் பிரிக்க பார்க்கிறது.

காதலுக்கும் யானையே தடையாக இருக்கிறது. இறுதியில் என்ன முடிவு என்பது கதை. யானையை வைத்து என்ன செய்ய முடியுமோ அதை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக கணேஷ் என்ற வளர்ப்பு யானையை ஒரு மாதம் வரை நடிக்க வைத்து படமாக்கி இருக்கிறோம். கொடைக்கானல், மூணார் பகுதி காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

திலக்மோகன், ஆர்சா என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். திலக்மோகன் பல மாதங்களாக யானையுடன் பழகிய பிறகே படப்பிடிப்பு நடத்தினோம். இது கண்டிப்பாக வித்தியாசமான படமாக இருக்கும்" என்கிறார் இயக்குனர் ஸ்மித்குமார்.


Post your comment





Related News
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
கும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்
கும்கி-2 படத்தில் கதாநாயகனாக பிரம்மாண்ட படமான பாகுபலி நாயகனா? - கசிந்தது தகவல்.!
கும்கி 2 படம்குறித்த சுவாரஸ்ய தகவல்!
கும்கி புகழ் பிரபுசாலமனின் புதிய படம் தாய்லாந்தில் உருவாகிறது!
கும்கி 2 படத்தை தள்ளிப்போடும் பிரபுசாலமன்!
கும்கி 2 படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!
கும்கி 2 படத்தை உறுதி செய்த பிரபுசாலமன்!
தனித்து ஜெயிக்கும் கும்கி அஸ்வின்
திருமணம் செய்து கொள்ள மாட்டேன்: லட்சுமி மேனன் திடீர் முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions