தனித்து ஜெயிக்கும் கும்கி அஸ்வின்

Bookmark and Share

தனித்து ஜெயிக்கும் கும்கி அஸ்வின்

பிரபல தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான சுவாமிநாதனின் மகன் அஸ்வின். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வில்லன் நான் கடவுள் ராஜேந்திரனின் குண்டு மகனாக நடித்தார்.

அதன் பிறகு பல படங்களில் ஹீரோக்களின் காமெடி நண்பனாக நடித்தார். கும்கி படத்தில் விக்ரம் பிரபு நண்பனாக நடித்தது நல்ல பெயரை கொடுக்கவே தன் பெயருக்கு முன்னால் கும்கியை சேர்த்து கும்கி அஸ்வின் ஆகிவிட்டார்.

தற்போது அப்பா தயாரிக்கும்  அப்பாடக்கர் படத்தில் ஜெயம்ரவியுடன் காமெடியாக நடித்து வருகிறார். இது தவிர அதர்வா நடிக்கும் ஈட்டி, கணிதன், விஜய் வசந்த் நடிக்கும் புதிய படம் ஜிகினா, மகராணி கோட்டை, சிப்பாய் படங்களில் நடித்து வருகிறார்.

கருணாகரன், சதீஷ், செண்ட்ராயன், அர்ஜுன் என புதிய தலைமுறை காமெடியன்கள் தனி ரூட் பிடித்து சென்று கொண்டிருக்கும்போது அஸ்வின் தனியாக போராடி ஜெயித்து வருகிறார்.

ஆரம்பத்தில் அப்பாவின் செல்வாக்கிலேயே  தொடர்ந்து வாய்ப்பு பெற்று வந்தார். தற்போது அவரே தன் திறமையால், உழைப்பால் வாய்ப்புகளை பெற்று வருகிறார். நல்ல திறமையும் நம்பிக்கையும் உள்ள அஸ்வின் தனியாக போராடி ஜெயித்தால் அவரால் நிலைத்து நின்று நல்ல காமெடி நடிகராக வளரமுடியும் என்கிறார்கள் சினிமா பார்வையாளர்கள்.


Post your comment





Related News
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
கும்கி-2 கதைக்களம் - மனம் திறந்தார் பிரபு சாலமன்
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?
கும்கி-2 படத்தில் கதாநாயகனாக பிரம்மாண்ட படமான பாகுபலி நாயகனா? - கசிந்தது தகவல்.!
நடிகர் ரஜினி மகளின் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்
தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சாதனை படைத்த அஸ்வின் தாத்தா- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சிம்பு நடித்த அஸ்வின் தாத்தா கெட்டப்பின் டீசர் நாளை வெளியாகிறது
சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆட்டோவை இடித்ததற்கு இதுதான் காரணமாம்
ஏப்ரல் மாதம் மதுரை மைக்கேல், அஷ்வின் தாத்தா வருகிறார்கள், பராக் பராக் பராக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions