கும்கி 2 படத்தை உறுதி செய்த பிரபுசாலமன்!

Bookmark and Share

கும்கி 2 படத்தை உறுதி செய்த பிரபுசாலமன்!

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் கும்கி. இதில் இடம்பெற்றுள்ள இமானின் பாடல்கள் இன்றளவும் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகப்போவதாக சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் செய்தி வெளியானது. இதுகுறித்து தற்போது பேசியுள்ள பிரபுசாலமன்,

” கும்கி 2 எடுக்கும் எண்ணம் கட்டாயம் எனக்கு உண்டு. ஆனால் அதில் அதே நடிகர்கள் நடிப்பார்களா என்பது எனக்கு தெரியாது. எனினும் கும்கி முதல் பாகத்தை விட இது ஹை பட்ஜெட் படமாக இருக்கும்” என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions