கும்கி 2 படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

Bookmark and Share

கும்கி 2 படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் கும்கி. இதில் இடம்பெற்றுள்ள இமானின் பாடல்கள் இன்றளவும் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகப்போவதாக சில நாட்களாக இணையத்தில் செய்தி வெளிவந்த வண்ணம் இருந்தது. இதை இயக்குனர் பிரபு சாலமனும் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தை பிரபல ஈரோஸ் நிறுவனத்தின் டிரினிட்டி பிக்சர்ஸ் தயாரிக்கபோவதாகவும் மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions