ட்ரைவராக நடித்து அரபு பேமிலியிடம் சிக்கிய மலையாள நடிகர்..!

Bookmark and Share

ட்ரைவராக நடித்து அரபு பேமிலியிடம் சிக்கிய மலையாள நடிகர்..!

வருடத்திற்கு ஆறு படங்களை கொடுத்து தன்னை எப்போதும் லைம்லைட்டிலேயே வைத்துக்கொள்பவர் மலையாள முன்னணி நடிகரான குஞ்சாக்கோ போபன்.. சில வருடங்களாக ஆவரேஜ் ஹிட்டுகளாக கொடுத்துவந்த குஞ்சாக்கோவை கடந்த 20012ல் வெளியான 'ஆர்டினரி' படத்தின் ஹிட் மீண்டும் டாப்பில் ஏற்றிவைத்தது... கடந்த மாதம் அவர் நடிப்பில் வெளியான 'கசின்ஸ்' படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்பதும் உண்மை தான்.

ஆனாலும் தற்போது சந்தோசமாக துபாயில் முகாமிட்டிருக்கிறார் குஞ்சாக்கோ.. காரணம் ஆர்டினரி இயக்குனரான சுகீத் தற்போது இயக்கிவரும் பெயரிடப்படாத படத்தின் ஹீரோ இவர்தான். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தான் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது.

இதில் டாக்சி ட்ரைவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் குஞ்சாக்கோ. சமீபத்தில் இவர் காருக்குள் அமர்ந்தபடி சவாரிக்காக வெயிட் பண்ணுவது போன்ற காட்சியை படமாக்கினார்கள்.

குஞ்சாக்கோ போபனும் துபாய் ட்ரைவர்களுக்கான யூனிபார்ம் அணிந்து பார்ப்பதற்கு ட்ரைவர் மாதிரியே தான் இருந்தார். அந்தக்காட்சியை வைட் ஆங்கிளில் படமாக்க விரும்பியதால் படக்குழுவினரும் சற்று தொலைவில் தான் இருந்தார்கள்.. அப்போது அங்கே வந்த ஒரு அரபு தம்பதியினர் காரை திறந்து உள்ளே ஏறி ஷார்ஜா மார்க்கெட் போப்பா என சொல்லியிருக்கிறார்கள்.

தூரத்தில் இருந்து பார்த்த படக்குழுவினருக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை.. ஆனால் அதன்பிறகு தான் அந்த தம்பதியினர் குஞ்சாக்கோவை சரியாக கவனித்தார்களாம். அப்புறம் என்ன குஞ்சாக்கோவுடன் ஜாலியாக போட்டோ எடுத்துகொண்டு, வாழ்த்துச்சொல்லிவிட்டு கிளம்பினார்களாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions