ஹாட்ரிக் சாதனை படைத்த குஞ்சாக்கோ - நமீதா பிரமோத் ஜோடி..!

Bookmark and Share

ஹாட்ரிக் சாதனை படைத்த குஞ்சாக்கோ - நமீதா பிரமோத் ஜோடி..!

எந்நேரமும் புன்னகை ததும்ப, பாந்தமான முகத்துடன், வலம் வரும் நமீதா பிரமோத்  தான்  இப்போது மலையாள சினிமாவின் ஹாட்கேக். ரசிகர்களின் மனதை அள்ளும் சிரிப்பு தான் அவரது ப்ளஸ்..

திலீப், துல்கர் சல்மான், குஞ்சாக்கோ போபன் என முன்னணி நடிகர்களின் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வரும் நமீதா பிரமோத், சமீபத்தில் தான் திலீப்புடன் ஹாட்ரிக் ஜோடி சேர்ந்தார்..

அந்த செய்தியின் ஈரம் காய்வதற்குள்ளாகவே குஞ்சாக்கோ போபனுடனும் ஹாட்ரிக் ஜோடி சேர்ந்துள்ளார் நமீதா பிரமோத். ஏற்கனவே 'புள்ளிப்புலிகளும் ஆட்டின் குட்டியும்' மற்றும் 'லா பாயிண்ட்' என இரண்டு படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி, அடுத்ததாக  'ஜமுனா பியாரி' என்கிற படத்தில் மீண்டும் இணைகிறது.

'ஜமுனாபாரி' என்கிற இனத்தை சேர்ந்த ஆடு ஒன்று நடிப்பதால் படத்திற்கு இந்தப்பெயரை சூட்டியுள்ளார்களாம். மம்முட்டியை வைத்து  'மாயா பஜார்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த தாமஸ் செபாஸ்டின் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.

ஜாய் மேத்யூ, செம்பான் வினோத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் பாலக்காட்டில் துவங்க இருக்கிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions