முதல்முறையாக பாஷை மாற்றி பேசும் குஞ்சாக்கோ போபன்..!

Bookmark and Share

முதல்முறையாக பாஷை மாற்றி பேசும் குஞ்சாக்கோ போபன்..!

தமிழ் சினிமாவில், சென்னை, மதுரை, கோவை, நெல்லை என தமிழ்நாட்டில் நம்ம ஊர் ஹீரோக்கள் பல பாஷைகளில் பேசுவதைப்போல மலையாள சினிமாவிலும் கோழிக்கோடு, திருவனந்தபுரம், காஞ்சிரப்பள்ளி, பாலக்காடு, திருச்சூர், கண்ணூர் ஆகிய பகுதிகளில் புழக்கத்தில் இருக்கும் பாஷைகள் பிரபலமானவை தான்.

கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கும். மலையாளத்தில் எவர்கிரீன் சூப்பர்ஹிட் என்று சொல்லப்படுகிற 'ராஜாமாணிக்கம்' படத்தில் மம்முட்டி பேசிய திருவனந்தபுரம் பாஷையை ரசிக்காதவர் கேரளாவில் பாக்கி இருக்கமாட்டார்கள்.

அதேபோலத்தான் 'ஆர்டினரி' படத்தில் பஸ் ட்ரைவராக நடித்த பிஜுமேனன் பாலக்காடு பாஷையில் பேசியதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு பிஜுமேனனுக்கு பாராட்டுக்களையும் குவித்தது.

தொடர்ந்து பிஜுமேனன் 'வெள்ளிமூங்கா' என்ற படத்தில் காஞ்சிரப்பள்ளி பாஷையிலும் பேசி நடித்தார். கடந்த வருடத்தில் வெளியான 'டால்பின்ஸ் பார்' படத்தில் சுரேஷ்கோபி கூட திருவனந்தபுரம் பாஷை பேச முயற்சித்திருந்தார்.  

இப்போது பாஷையை மாற்றி பேசுவது குஞ்சாக்கோ போபனின் முறை ஆகும். இதுவரை கிராமத்து ஆளாக நடித்தால்கூட அதிலும் ஜென்டில்மேனாக நடிப்பவர் குஞ்சாக்கோ.

ஆனால் இந்த முறை ஜமுனா பியாரி என்கிற படத்தில் ஆட்டோ ட்ரைவராக நடிக்கும் குஞ்சாக்கோ, திருச்சூர்காரனாக வருவதால் முதன்முறையாக திருச்சூர் பாஷை பேச இருக்கிறார். இதற்குமுன் 'புண்ணியாலன் அகர்பத்திஸ்' படத்தில் ஜெயசூர்யா கூட திருச்சூர் பாஷைதான் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்ததக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions