த்ரில்லர் கதையில் மீண்டும் இணையும் குஞ்சாக்கோ - ஜெயசூர்யா..!

Bookmark and Share

த்ரில்லர் கதையில் மீண்டும் இணையும் குஞ்சாக்கோ - ஜெயசூர்யா..!

மலையாளத்தில் 'ட்ராபிக்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர்தான் ராஜேஷ் பிள்ளை.. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான 'மிலி' திரைப்படம் நல்ல விமர்ச்னங்களுடன் வெற்றிகரமாக ஐம்பது நாட்களுக்கு மேல் ஓடியது.  

நிவின்பாலி, அமலாபால் நடித்திருந்த இந்தப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் ராஜேஷ் பிள்ளை. த்ரில்லர் படமாக உருவாகிவரும் இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபனும் ஜெயசூர்யாவும் இணைந்து நடிக்கின்றனர்.

ஏற்கனவே 'குளமல்', 'லாலிபாப்' உட்பட சில படங்களில் இணைந்து நடித்திருக்கும் இவர்கள் இருவருக்கும் இந்தப்படத்தில் சம அளவிலான கதாபாத்திரம் தரப்படவுள்ளதாம். தவிர இருவரின் கேரக்டர்களும் வித்தியாசமானதாக இருக்குமாம்.

'க்ரிஷ்', 'ரவுடி ரத்தோர்' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சந்தோஷ் தூண்டியில் தன இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு வரும் ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளது.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions