பஸ் கண்டக்டர், இப்போ ஆட்டோ ட்ரைவர் ஆனார் - குஞ்சாக்கோவின் புது யூனிபார்ம்.!

Bookmark and Share

பஸ் கண்டக்டர், இப்போ ஆட்டோ ட்ரைவர் ஆனார் - குஞ்சாக்கோவின் புது யூனிபார்ம்.!

வித்தியாசமான கதாபாத்திரம்.. இதுதான் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனின் தாரக மந்திரம்.. விதவிதமான கதாபாத்திரங்களில் தன்னை புகுத்திக்கொண்டு சாதாரண மக்களுடன் மக்களாக ஐக்கியமாகும்போது தான் தனது படங்களில் வெற்றி சாத்தியமாகிறது என திடமாக நம்புகிறவர்.

'ஆர்டினரி' படத்தில் இவரது கண்டக்டர் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு இவருக்கு இன்னும் ஊக்கம் கொடுத்துள்ளது. அந்த வகையில் அதே ஆர்டினரி இயக்குனரின் 'மதுர நாரங்கா' படத்தில் துபாயில் டாக்ஸி ட்ரைவராக நடித்து வருகிறார்.

இதை கவனித்து வந்த இயக்குனர் தாமஸ் செபாஸ்டினுக்கு, “இவர் நமக்கு சரிப்பட்டு வருவார்'' என தோன்றவே தற்போது தான் இயக்கி வரும் ஜமுனாபியாரி என்கிற படத்தில் குஞ்சாக்கோவை ஆட்டோ ஓட்டுனராக்கி காக்கி யூனிபார்மும் மாட்டிவிட்டுள்ளார்.  

“நான் பள்ளிக்கூடம் போறப்பவே ஆட்டோ ஓட்டி பார்த்திருக்கிறேன்.. அதனால் இப்போ சினிமாவுக்காக ஆட்டோ ஓட்டுறதுல ஒண்ணும் கஷ்டம் இருக்கிறதா தெரியல” என்கிறார் குஞ்சாக்கோ போபன்.

இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபனுடனும் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நமீதா பிரமோத். படத்தின் டைட்டில் கேரக்டரில் 'ஜமுனாபாரி' என்கிற இனத்தை சேர்ந்த ஆடு ஒன்றும் நடிக்கிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions