மோகன்லால் நடிப்பதாக இருந்த 'குஞ்சாலி மரைக்காயர்' கைவிடப்பட்டதா.?

Bookmark and Share

மோகன்லால் நடிப்பதாக இருந்த 'குஞ்சாலி மரைக்காயர்' கைவிடப்பட்டதா.?

கோழிக்கோட்டில் வாஸ்கோடகாமா வந்து இறங்கியது முதல், முஸ்லீம்களுக்கு எதிராக அக்கிரமம் செய்த போர்ச்சுக்கீசியரை எதிர்த்து “அந்நியரைக் காலூன்ற அனுமதிக்க முடியாது.” என்று முதன்முதலில் சூளுரைத்தவர் மலையாள தேசத்தின் மாபெரும் போராட்ட வீரர் குஞ்சாலி மரைக்காயர் தான்.

சொன்னது மட்டுமின்றி செயலிலும் காட்டும் முகமாக அந்நியருக்கெதிரான போரில் கடற்படைக்குத் தலைமை தாங்கினார் அந்த வீரர்.   சரி.. விஷயத்துக்கு வருவோம். அந்த மாவீரர் குஞ்சாலி மரைக்காயர் வரலாற்றை படமாக்கவேண்டும் என்கிற ஆர்வம் பல மலையாள இயக்குனர்களுக்கு இன்றும் உண்டு.

ஆனால் அதற்கு முதலில் பிளையார் சுழி போட்டவர் பிரபல மலையாள இயக்குனரான டி.கே.ராஜீவ் குமார். மலையாள சினிமாவில் 35 வருட சரித்திரம் கொண்ட இவர் தான் புகழ்பெற்ற மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கியவர்.. கமல், ஜெயராமை வைத்து 'சாணக்யன்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்தவர்..இவர்தான் மோகன்லாலை வைத்து 'குஞ்சாலி மரைக்காயர்' கதையை படமாக்க போவதாக அறிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க நாள் விழாவில் கூட 'குஞ்சாலி மரைக்காயர்' நாடகத்தை அரங்கேற்ற, அதில் மோகன்லால் நடித்த நிகழ்வும் அரங்கேறியது.. ஏற்கனவே மோகன்லாலை வைத்து மூன்று படங்களை டி.கே.ராஜீவ் குமார்.

இயக்கியும் உள்ளார் ஆனால் என்ன காரணமோ 'குஞ்சாலி மரைக்காயர்' படம் அடுத்தகட்டத்தை நோக்கி நகரவில்லை. அதுமட்டுமல்ல, இயக்குனர் அமல் நீரத், மம்முட்டியையும், பிருத்விராஜையும் வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் 'குஞ்சாலி மரைக்காயர்' வரலாற்றை படமாக்கப்போவதாகவும் கூட செய்திகள் அடிபட்டன. ஆனால் அதுவும் பேச்சோடு நின்றுபோனது. அப்படிஎன்றால் 'குஞ்சாலி மரைக்காயர்' வரலாற்றுக்கு உயிர்கொடுக்கப்போவது யார்..?


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions