4 ஆண்டு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள சர்க்கஸ் செய்யும் அதிமுக கோஷ்டிகள்... போட்டு தாக்கும் குஷ்பு!

Bookmark and Share

4 ஆண்டு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள சர்க்கஸ் செய்யும் அதிமுக கோஷ்டிகள்... போட்டு தாக்கும் குஷ்பு!

அதிமுக அரசின் மீதமுள்ள 4 ஆண்டுகால ஆட்சியில் பணம் சம்பாதித்துக் கொள்ள இரு கோஷ்டிகளும் ஒன்றிணைவது குறித்து சர்க்கஸ் நடத்தி வருகின்றன என்று நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பூ சாடியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவுபட்ட அதிமுகவின் இரண்டு கோஷ்டிகளும் தற்போது இணைவது என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி சர்க்கஸ் போன்று உள்ளது.

இந்த இரு அணிகளும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கான வழியை தேடுகின்றனரே தவிர விவசாயிகள் போராட்டத்தில் உருப்படியாக எதையும் செய்யவில்லை. தமிழக மக்கள் ஜெயலலிதாவிற்கு தான் வாக்களித்தார்களே இந்த இரு கோஷ்டிகளுக்கு அல்ல.

மேலும் உள்ளாட்சி தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள். தொப்பிக்கோ, இரட்டை விளக்கிற்கோ ஓட்டு போட மாட்டார்கள். அதனால் இந்த இரு அணிகளும் இணைவது என்பது மீதமுள்ள 4 ஆண்டுகளில் கூடுமானவரை பணத்தை சம்பாதித்துக் கொள்ளத்தான்.

இந்த இரு அணிகள்தான் சர்க்கஸ் செய்கிறது என்றால் தமிழக அரசியலில் இவர்களை வைத்து பாஜக செஸ் விளையாடுகிறது. டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து பல்வேறு வகையில் போரட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களை முதல்வரோ , பிரதமரோ சந்திக்கவில்லை. உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது போல் தமிழகத்திலும் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. இவ்வாறு குஷ்பு கூறினார்.


Post your comment





Related News
கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் தவிர வேறு யாரும் இப்படி நடிக்க முடியாது: குஷ்பு பாராட்டு
திடீரென சத்யராஜ் பற்றி ஒரு ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு
நந்தினியில் பழிவாங்கும் பாம்பாக வரும் குஷ்பு
ஜல்லிக்கட்டு.. போன வருடம் மாதிரி இந்த வருடமும் பாஜக-அதிமுக நாடகம்-குஷ்பு கடும் தாக்கு
என் ஹீரோ… என் நண்பன்… என் உயிர்..! இவர்தான் – நடிகை குஷ்பூ அன்புமழை
வெளிநாடு செல்ல குஷ்பூவுக்கு தடை ! கோர்ட்டில் மனு தாக்கல்
விஷால் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னை ஜெயிக்க வைத்துவிடுவார். குஷ்பு
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாற்றத்தை கொண்டு வர உழைப்போம்: குஷ்பு
விஷாலுக்காக தேர்தலில் போட்டியிடும் குஷ்பூ! திடீர் முடிவு
9 வருஷமாச்சு, அப்போ அண்ணன் சிரஞ்சீவி, இப்போ தம்பி பவன் கல்யாண்- குஷ்பு ஹேப்பி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions