தலயா? தளபதியா? – குஷ்பூ சொன்ன பதிலும் ஷாக் ஆன ரசிகர்களும்

Bookmark and Share

தலயா? தளபதியா? – குஷ்பூ சொன்ன பதிலும் ஷாக் ஆன ரசிகர்களும்

எம்ஜிஆர்-சிவாஜிகணேசன், ரஜினிகாந்த்-கமல்ஹாசன், விஜய்-அஜித் என அன்று முதல் இன்றுவரை ஹீரோக்களுக்கு இடையேயான போட்டிகள் இருந்துகொண்டே தான் உள்ளது. அதிலும் தல-தளபதி விவாதம் சொல்லவே வேண்டாம்… இந்தியாவிற்கே தெரியும்.

டிவிட்டரில் அதிகம் கருத்துக்களைச் சொல்லும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் குஷ்பு. சில சமயங்களில் இவரது பதில், ஏட்டிக்குப் போட்டியானதாகவும் சர்ச்சைக்குரியதாகவும் இருக்கும். நேற்று ஒரு ரசிகர் குஷ்புவிடம் நீங்கள் ‘தல ரசிகையா, தளபதி ரசிகையா’ எனக் கேட்டுள்ளார். அதற்கு கொஞ்சமும் தயங்காமல் ‘நவரச நாயகன் கார்த்திக்’ என பதிலளித்துள்ளார். இவரது பதிலை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ரசிகருக்கு சற்று ஷாக்காகவே இருந்ததாம்.

இதற்கு முன்பும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரைப் பற்றிய ரசிகர் ஒருவரின் கேள்வியில், “ரஜினிகாந்துடன் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நடிக்க மாட்டேன். ஆனால், கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் உடனே நடிப்பேன்” என்று பதிலளித்திருந்தார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions