
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக-பாஜக கட்சிகள் நீலிக்கண்ணீர் வடிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்தார்.
டிவிட்டரில் குஷ்பு கூறியதாவது: அதிமுக மற்றும் பாஜக இரு கட்சிகளும் உண்மையிலேயே ஜல்லிக்கட்டு நடத்த அக்கறை கொண்டிருந்தால், முன்பாகவே போதிய நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.
ஆனால், முதலைக் கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.2012, 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில், ஜல்லிக்கட்டுக்கு தடை இருந்தபோதிலும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சிறப்பு உத்தரவுகள் அதற்கு காரணம். அதை இப்போது ஏன் செய்ய முடியவில்லை?நான்கு தவறுகள், ஜல்லிக்கட்டு மீதான நாற்பதாயிரம் உரிமைகளை அழித்துவிடாது.
கிராமப்புற தமிழகத்தில், காளைகள் என்பது வீட்டில் ஒரு பிள்ளை போல பார்க்கப்படுகிறது. ஒரு விவசாயியை விட காளை மீது அன்பு வைத்திருப்பவர் வேறு யார் இருப்பார்கள், அவர்களை கேட்டுப்பாருங்கள், ஜல்லிக்கட்டு வேண்டுமா, வேண்டாமா என்பதை.
உரியடி திருவிழாவில் கூட்ட நெரிசலால் மனித உயிர்களுக்கு ஆபத்து என கோர்ட் தெரிவித்திருந்தும்கூட மும்பையில் உரியடி நடந்தது. சமூக போராளிகள் அப்போது எங்கே சென்றனர்?கடந்த முறையை போலவே அதிமுகவும், பாஜகவும் இந்த வருடமும் திட்டமிட்டு நாடகமாடி வருகிறார்கள். எங்களை முட்டாள்களாக்கியது போதும். இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
Post your comment
Related News | |
![]() |