பாரத மாதாவாக குஷ்பு... உற்றுப் பார்த்து அதிர்ந்த மக்கள்... காங். பிளக்ஸ் போர்டு அகற்றம்!

Bookmark and Share

பாரத மாதாவாக குஷ்பு... உற்றுப் பார்த்து அதிர்ந்த மக்கள்... காங். பிளக்ஸ் போர்டு அகற்றம்!

மதுரையில் பாரத மாதாவாக குஷ்புவை சித்தரித்து, காங்கிரஸ் சார்பில் வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் போர்டை போலீசார் அகற்றியுள்ளனர். மதுரை உத்தங்குடி பஸ் நிறுத்தம் அருகே குடியரசு தினத்தையொட்டி காங்கிரஸ் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டு இருந்தது.

அதில், இந்திய வரைபடத்துக்குள் சிங்கம் மீது பாரத மாதா கையில் தேசிய கொடியுடன் அமர்ந்திருப்பது போன்ற படம் இருந்தது.ஜனவரி 26ம் தேதி வைக்கப் பட்ட இந்தப் பிளக்ஸ் போர்டை முதலில் யாரும் சரியாக கவனிக்கவில்லை.

பின்னர், நன்றாக உற்றுப் பார்த்த போது, அதில் பாரதமாதாவாக சித்தரிக்கப் பட்டிருப்பது நடிகை குஷ்பு என தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட பா.ஜனதா கட்சியின் துணைத்தலைவர் ஹரிகரன், ‘இந்த பிளக்ஸ் போர்டு மூலம் தேசிய சின்னம் மற்றும் தேசிய கொடியை அவமதிப்பு செய்ததற்காக காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகார் அளிக்கப் பட்ட சில மணி நேரத்தில் உத்தங்குடி பஸ் நிறுத்தம் அருகில் இருந்த சர்ச்சைக்குரிய அந்த பிளக்ஸ் போர்டு அகற்றப் பட்டு விட்டது.


Post your comment





Related News
குஷ்பு ஜல்லிக்கட்டு பத்தி சொன்ன பாயிண்ட் உண்மையிலேயே கைதட்ட வேண்டியது
ஏன் எனக்கு அறிவு இல்லை? குஷ்பு குமுறல்
விபச்சார புரோக்கர்தான் அப்படி பேச முடியும் கொதித்தெழுந்த குஷ்பு
கலைகளுக்கு மட்டும் நடுவர்களாக இருப்போம்: லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்புவுக்கு ஸ்ரீப்ரியா கோரிக்கை
மேகி நூடுல்ஸ் விளம்பர படங்களில் நடித்தவர்கள் மீது எப்படி பழி போடலாம்?: குஷ்பு கண்டனம்
குஷ்புக்கு விருந்து கொடுத்த ஹன்சிகா
விஜய்-பிரபுதேவாவுக்காக குஷ்பு செய்த தியாகம்!
சுனந்தா புஷ்கர் கதையை படமாக்குவதாக சர்ச்சை: குஷ்பு மீது டைரக்டர் பாய்ச்சல்
ருத்ராட்ச தாலி: குஷ்பு மீதான வழக்கு தள்ளுபடி
இந்த வருடத்தில் கணவருக்கு ஒண்ணு, புதுமுகங்களுக்கு ரெண்டு: குஷ்புவின் திடீர் முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions