மேகி நூடுல்ஸ் விளம்பர படங்களில் நடித்தவர்கள் மீது எப்படி பழி போடலாம்?: குஷ்பு கண்டனம்

Bookmark and Share

மேகி நூடுல்ஸ் விளம்பர படங்களில் நடித்தவர்கள் மீது எப்படி பழி போடலாம்?: குஷ்பு கண்டனம்

மேகி நூடுல்ஸ் உணவு பொருளில் ரசாயன பொருட்கள் சேர்ப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதை சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து டெல்லி, கேரளா உள்பட சில மாநிலங்களில் மேகி நூடுல்சுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்சை பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

மேகி நூடுல்ஸ் உணவு பொருள் பற்றிய விளம்பர படங்களில் நடித்துள்ள இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இவர்களை கைது செய்யலாம் என்றும் கோர்ட்டு உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது. இது, திரைப்பட துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சர்ச்சை தொடர்பாக நடிகை குஷ்பு தனது ‘டுவிட்டரில்’ கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

‘‘ஒரு உணவு பொருளை, உணவு அமைப்பு அங்கீகரித்த பிறகே அது கடையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பிரபலங்கள் மீது எப்படி பழி போடுவீர்கள்? கடையில், ஒரு பொருள் விற்கப்படுவதற்கு முன்பு அதை சோதனை செய்ய மாட்டார்களா?

அதை நாம் தலைகீழாகத்தான் செய்வோமா? முதலில் பொருள் வாங்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட பிறகுதான் சோதனை செய்வோமா?’’
இவ்வாறு குஷ்பு கருத்து தெரிவித்து இருக்கிறார். 


Post your comment





Related News
குஷ்பு ஜல்லிக்கட்டு பத்தி சொன்ன பாயிண்ட் உண்மையிலேயே கைதட்ட வேண்டியது
ஏன் எனக்கு அறிவு இல்லை? குஷ்பு குமுறல்
விபச்சார புரோக்கர்தான் அப்படி பேச முடியும் கொதித்தெழுந்த குஷ்பு
கலைகளுக்கு மட்டும் நடுவர்களாக இருப்போம்: லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்புவுக்கு ஸ்ரீப்ரியா கோரிக்கை
குஷ்புக்கு விருந்து கொடுத்த ஹன்சிகா
விஜய்-பிரபுதேவாவுக்காக குஷ்பு செய்த தியாகம்!
சுனந்தா புஷ்கர் கதையை படமாக்குவதாக சர்ச்சை: குஷ்பு மீது டைரக்டர் பாய்ச்சல்
ருத்ராட்ச தாலி: குஷ்பு மீதான வழக்கு தள்ளுபடி
இந்த வருடத்தில் கணவருக்கு ஒண்ணு, புதுமுகங்களுக்கு ரெண்டு: குஷ்புவின் திடீர் முடிவு
ராமாநாயுடுக்கு நயன்தாரா, குஷ்பு, திரிஷா புகழாரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions