இந்த வருடத்தில் கணவருக்கு ஒண்ணு, புதுமுகங்களுக்கு ரெண்டு: குஷ்புவின் திடீர் முடிவு

Bookmark and Share

இந்த வருடத்தில் கணவருக்கு ஒண்ணு, புதுமுகங்களுக்கு ரெண்டு: குஷ்புவின் திடீர் முடிவு

நடிகை குஷ்பு ‘அவ்னி சினி மேக்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன்மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை ‘கிரி’, ‘ரெண்டு’, ‘நகரம் மறுபக்கம்’, ‘கலகலப்பு’, ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இந்த படங்களையெல்லாம் அவரது கணவரான இயக்குனர் சுந்தர்.சிதான் இயக்கியிருந்தார். இப்போது முதன்முதலாக தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவதாக குஷ்பு கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது,

இந்த வருடத்தில் எனது அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் சார்பில் 3 படங்களை தயாரிக்க உள்ளேன். இதில் ஒரு படத்தை எனது கணவர் சுந்தர்.சி இயக்கவுள்ளார். மற்ற இரண்டு படங்களிலும் புதுமுகங்களை அறிமுகப்படுத்த போகிறேன் என்று கூறியுள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘ஆம்பள’. இப்படத்திற்கு பிறகு ‘அரண்மனை’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க சுந்தர்.சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை குஷ்பு தயாரிப்பார் என கூறப்படுகிறது. 


Post your comment





Related News
குஷ்பு ஜல்லிக்கட்டு பத்தி சொன்ன பாயிண்ட் உண்மையிலேயே கைதட்ட வேண்டியது
ஏன் எனக்கு அறிவு இல்லை? குஷ்பு குமுறல்
விபச்சார புரோக்கர்தான் அப்படி பேச முடியும் கொதித்தெழுந்த குஷ்பு
கலைகளுக்கு மட்டும் நடுவர்களாக இருப்போம்: லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்புவுக்கு ஸ்ரீப்ரியா கோரிக்கை
மேகி நூடுல்ஸ் விளம்பர படங்களில் நடித்தவர்கள் மீது எப்படி பழி போடலாம்?: குஷ்பு கண்டனம்
குஷ்புக்கு விருந்து கொடுத்த ஹன்சிகா
விஜய்-பிரபுதேவாவுக்காக குஷ்பு செய்த தியாகம்!
சுனந்தா புஷ்கர் கதையை படமாக்குவதாக சர்ச்சை: குஷ்பு மீது டைரக்டர் பாய்ச்சல்
ருத்ராட்ச தாலி: குஷ்பு மீதான வழக்கு தள்ளுபடி
ராமாநாயுடுக்கு நயன்தாரா, குஷ்பு, திரிஷா புகழாரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions