சுனந்தா புஷ்கர் கதையை படமாக்குவதாக சர்ச்சை: குஷ்பு மீது டைரக்டர் பாய்ச்சல்

Bookmark and Share

சுனந்தா புஷ்கர் கதையை படமாக்குவதாக சர்ச்சை: குஷ்பு மீது டைரக்டர் பாய்ச்சல்

சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் படமாக எடுத்தவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். 'குப்பி' என்ற பெயரில் ராஜீவ் கொலை சம்பவத்தையும் படமாக எடுத்து பரபரப்பாக பேசப்பட்டார். இவர் தற்போது ‘ஒரு மெல்லிய கோடு’ என்ற பெயரில் புது படம் இயக்கி வருகிறார்.

இதில் அர்ஜூன், ஷாம், மனிஷா கொய்ராலா போன்றோர் நடிக்கின்றனர். இப்படம் காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை மையமாக வைத்து தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் கொலை செய்யப்பட்டதுபோல் காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை குஷ்பு படக்குழுவினரிடம் தொடர்பு கொண்டு சுனந்தா புஷ்கர் கதையை படமாக எடுக்கிறீர்களா? என்று விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கதையை தன்னிடம் சொல்லும்படி நிர்ப்பந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்காக குஷ்புவை டைரக்டர் ஏ.எம்.ஆர். ரமேஷ் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:– நடிகை குஷ்பு எங்கள் படக்குழுவை சேர்ந்த ஒருவரிடம் தொடர்பு கொண்டு படத்தின் கதை பற்றி விவாதித்துள்ளார். சுனந்தா புஷ்கர் வாழ்க்கை கதையையா படமாக்குகிறீர்கள் என்றும் கேட்டுள்ளார்.

இந்த படத்தின் மீது குஷ்பு ஏன் ஆர்வம் காட்டுகிறார் என்று புரியவில்லை. குஷ்பு காங்கிரசில் இருக்கிறார். நான் சுனந்தா புஷ்கர் வாழ்க்கையை படமாக்குகிறேன் என்று டெல்லியில் உள்ள யாரேனும் சந்தேகித்து குஷ்புவிடம் விசாரிக்க சொல்லி இருக்கலாம். ஆனாலும் என் படத்தின் கதையை யாரிடமும் நான் சொல்ல மாட்டேன்.
எந்த ஒரு நடிகரோ, டைரக்டரோ அவர்கள் படத்தின் கதையை வெளியே சொல்வது இல்லை. எனது உதவி இயக்குனர்களுக்குகூட இந்த படத்தின் கதை எதை பற்றியது என்று தெரியாது. குஷ்புவுக்கு கதை பற்றி தெரிய வேண்டுமானால் என்னிடம் நேரிலே பேசலாம்.

இப்போது சொல்கிறேன். இந்த படம் ஒரு மர்மமான கொலை பற்றியதுதான். மனிஷா கொய்ராலா கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை பற்றி துப்பு துலக்குவதுதான் கதை. படத்தை பற்றி வேறு எதையும் நான் சொல்ல மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

குஷ்பு டுவிட்டரில் இதுகுறித்து கூறும்போது, ‘‘சுனந்தா புஷ்கர் வாழ்க்கையை படமாக்குவதாகவும், எனவே படத்தின் கதையை என்னிடம் சொல்லும்படி கேட்டதாகவும் வதந்தி பரவி உள்ளது. அப்படி யாரிடமும் கேட்கவில்லை.

அந்த படத்தில் அர்ஜூன் மனைவி கேரக்டரில் நடிக்க என்னை அணுகினர். நான் படங்களில் நடிப்பதை நிறுத்தி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது என்றும், நடிக்க விருப்பம் இல்லை என்றும் தெரிவித்தேன். கதையை கேட்கவில்லை’’ என்றார். 


Post your comment





Related News
குஷ்பு ஜல்லிக்கட்டு பத்தி சொன்ன பாயிண்ட் உண்மையிலேயே கைதட்ட வேண்டியது
ஏன் எனக்கு அறிவு இல்லை? குஷ்பு குமுறல்
விபச்சார புரோக்கர்தான் அப்படி பேச முடியும் கொதித்தெழுந்த குஷ்பு
கலைகளுக்கு மட்டும் நடுவர்களாக இருப்போம்: லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்புவுக்கு ஸ்ரீப்ரியா கோரிக்கை
மேகி நூடுல்ஸ் விளம்பர படங்களில் நடித்தவர்கள் மீது எப்படி பழி போடலாம்?: குஷ்பு கண்டனம்
குஷ்புக்கு விருந்து கொடுத்த ஹன்சிகா
விஜய்-பிரபுதேவாவுக்காக குஷ்பு செய்த தியாகம்!
ருத்ராட்ச தாலி: குஷ்பு மீதான வழக்கு தள்ளுபடி
இந்த வருடத்தில் கணவருக்கு ஒண்ணு, புதுமுகங்களுக்கு ரெண்டு: குஷ்புவின் திடீர் முடிவு
ராமாநாயுடுக்கு நயன்தாரா, குஷ்பு, திரிஷா புகழாரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions