ருத்ராட்ச தாலி: குஷ்பு மீதான வழக்கு தள்ளுபடி

Bookmark and Share

ருத்ராட்ச தாலி: குஷ்பு மீதான வழக்கு தள்ளுபடி

நடிகை குஷ்பு ருத்திராட்சத்தில் தாலி அணிந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த புகைப்படம் பத்திரிகைகளில் வெளிவந்தது. இதை பார்த்து கும்பகோணத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் பாலா, கும்பகோணம் 2வது கூடுதல் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

"ருத்ராட்ச மாலை சிவனடியார்களும், சிவபக்தர்களும் அணியும் புனிதமானது. அதனை குஷ்பு தாலியாக அணிந்திருப்பது இந்து மதத்துக்கு விரோதமானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தது. "இந்த வழக்கின் சாட்சியாக பத்திரிகை படத்தை மட்டுமே மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். நேரில் பார்த்த சாட்சிகள் விபரம் தரப்படவில்லை. வழக்கிற்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்கிறேன்" என்று நீதிபதி அறிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக குஷ்பு கூறும்போது "நான் அணிந்திருந்தது ருத்ராட்சமும் அல்ல. அதில் கோர்க்கப்பட்டிருந்தது தாலியும் அல்ல. இரண்டுமே பிளாஷ்டிக்கால் செய்யப்பட்டது. ஒரு மாறுதலுக்காக அதை அணிந்திருந்தேன்.

நான் என்ன தாலி அணிந்திருக்கிறேன் என்பதை யாருக்கும் காட்டத் தேவையில்லை" என்று கருத்து தெரிவித்திருந்தார்.


Post your comment





Related News
குஷ்பு ஜல்லிக்கட்டு பத்தி சொன்ன பாயிண்ட் உண்மையிலேயே கைதட்ட வேண்டியது
ஏன் எனக்கு அறிவு இல்லை? குஷ்பு குமுறல்
விபச்சார புரோக்கர்தான் அப்படி பேச முடியும் கொதித்தெழுந்த குஷ்பு
கலைகளுக்கு மட்டும் நடுவர்களாக இருப்போம்: லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்புவுக்கு ஸ்ரீப்ரியா கோரிக்கை
மேகி நூடுல்ஸ் விளம்பர படங்களில் நடித்தவர்கள் மீது எப்படி பழி போடலாம்?: குஷ்பு கண்டனம்
குஷ்புக்கு விருந்து கொடுத்த ஹன்சிகா
விஜய்-பிரபுதேவாவுக்காக குஷ்பு செய்த தியாகம்!
சுனந்தா புஷ்கர் கதையை படமாக்குவதாக சர்ச்சை: குஷ்பு மீது டைரக்டர் பாய்ச்சல்
இந்த வருடத்தில் கணவருக்கு ஒண்ணு, புதுமுகங்களுக்கு ரெண்டு: குஷ்புவின் திடீர் முடிவு
ராமாநாயுடுக்கு நயன்தாரா, குஷ்பு, திரிஷா புகழாரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions