மீண்டும் இணையும் குஷி ஜோடி

Bookmark and Share

மீண்டும் இணையும் குஷி ஜோடி

விஜய் நடிப்பில் விரைவில் "புலி" படம் வெளிவர உள்ள நிலையில், தற்போது அட்லீ இயக்கத்தில் "விஜய் 59" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, விஜய், நீண்டநாள் நண்பரான எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில், விஜய், ஜோதிகா நடித்து 2000ம்ஆண்டில் வெளியான "குஷி" படம், விஜய்யின் திரையுலக வரலாற்றில் முக்கியப்படமாக அமைந்தது. காதல் மற்றும் குடும்பப்படங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்த விஜய்க்கு, குஷி படம், கமர்ஷியல் ரொமான்டிக் படமாக அமைந்தது.

புலி படம், விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அட்லீ இயக்கத்திலான படத்தின் படப்பிடிப்பும் துரித கதியில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, விஜயை சந்தித்துப்பேசிய எஸ்.ஜே. சூர்யா, படத்தின் கதையை கூறியுள்ளார்.

படத்தின் கதை தனக்கு பிடித்துள்ளதால், விரைவில் நாம் இணைந்து படம் பண்ணுவோம் என்று சூர்யாவிடம் விஜய் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்து விஜயை இயக்க உள்ளதாக, சமீபத்தில் செய்தி வெளியாகியிருந்த நிலையில், அடுத்து விஜய் நடிக்க இருப்பது எஸ்.ஜே. சூர்யா இயக்கத்திலா அல்லது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலா என்பது விஜய்க்கு மட்டுமே வெளிச்சம்....


Post your comment





Related News
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
இன்று விஜய் ரசிகர்களுக்கு ஒரு குஷியான நாள்
பிரபல நடிகை மகளின் அம்பலமான சில்மிஷங்கள்!
குஷி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவா…?
மைனரான ஹோட்டல் ஊழியர் மீது தெலுங்கு நடிகை பரபரப்பு புகார்
வாழ்வா சாவா என்று இருந்தபோது என்னை தூக்கி விட்டவர் எஸ்.ஜே.சூர்யா: விஜய்
நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் இசை
எஸ்.ஜே.சூர்யாவின் இசை காந்தி ஜெயந்தி அன்று வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions