மைனரான ஹோட்டல் ஊழியர் மீது தெலுங்கு நடிகை பரபரப்பு புகார்

Bookmark and Share

மைனரான ஹோட்டல் ஊழியர் மீது தெலுங்கு நடிகை பரபரப்பு புகார்

டொங்கா பிரேமா எனும் தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை குஷி முகர்ஜி வட இந்தியாவைச் சேர்ந்தவர். தெலுங்கு படத்தைத் தொடர்ந்து தற்போது இந்தியில் தனது முதல் படத்தில் நடித்து வரும் நடிகை குஷி முகர்ஜி மைனரான ஹோட்டல் ஊழியர்  மீது, தான் உறங்கும் போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

போபாலில் இந்தி பட படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் நடிகை குஷி முகர்ஜி அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். அவர் உறங்கிக் கொண்டிருக்கும்போது உள்ள வந்த அந்த ஹோட்டல் ஊழியர் குஷியிடம் தவறாக நடக்க முயன்றதாக குஷி போலீசில் தெரிவித்துள்ளார்.

ஆனால் மைனரான அந்த ஹோட்டல் ஊழியர் நடிகை குஷி குடிபோதையில் இருந்ததாகவும், அவரை எழுப்பவே தான் அவர் அருகில் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். போலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இத்தகவல் டோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 


Post your comment





Related News
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
இன்று விஜய் ரசிகர்களுக்கு ஒரு குஷியான நாள்
பிரபல நடிகை மகளின் அம்பலமான சில்மிஷங்கள்!
குஷி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவா…?
மீண்டும் இணையும் குஷி ஜோடி
வாழ்வா சாவா என்று இருந்தபோது என்னை தூக்கி விட்டவர் எஸ்.ஜே.சூர்யா: விஜய்
நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் இசை
எஸ்.ஜே.சூர்யாவின் இசை காந்தி ஜெயந்தி அன்று வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions