குற்றம் கடிதல் பிரம்மாவை துரத்தும் உதவி இயக்குனர்கள்!

Bookmark and Share

குற்றம் கடிதல் பிரம்மாவை துரத்தும் உதவி இயக்குனர்கள்!

ஜே.எஸ்.கே பிலிம்ஸ் ஜே.சதீஷ்குமார் தயாரித்துள்ள படம் குற்றம் கடிதல். இந்த படத்தை பிரம்மா என்ற புதியவர் இயக்கியுள்ளார். ராதிகா பிரசித்தா, சாய் ராஜ்குமார், பவல் நவகீதன், மாஸ்டர் அஜய், நிகிலா கேசவன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஒரு பள்ளி டீச்சர் ஒரு மாணவனை அடித்து விடுவாராம்.

அதையடுத்து அவரது மனதளவில் அவர் பீல் பண்ணுவதைத்தான் இந்த படத்தில் மையக்கருவாக வைத்திருக்கிறாராம் இயக்குனர் பிரம்மா. அந்த வகையில் ஒரு ஆசிரியையின் மனநிலையை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கிறதாம்.

அதனால்தான் இந்த படத்துக்கு கண்டிப்பாக விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனுப்பினார்களாம். அதேபோல் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதையும் அப்படம் தட்டி வந்திருக்கிறது.

சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தியவர்கள், விரைவில் படத்தையும் தியேட்டருக்கு கொண்டு வருகிறார்கள். தேசிய விருது படம் என்பதால் இதுவரையில்லாத அளவுக்கு குற்றம் கடிதல் படத்துக்கு எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

அதோடு, குற்றம் கடிதல் டைரக்டர் பிரம்மாவிடம் உதவி இயக்குனராக வேலை செய்யவும் கோலிவுட்டின் ஆண்-பெண் உதவி இயக்குனர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

அப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற்ற அன்றே அவரை முற்றுகையிட்ட உதவி இயக்குனர்கள், இப்போதும் துரத்துகிறார்கள். அந்த அளவுக்கு அவரது படைப்பு நாளைய இயக்குனர்களை பெரிய அளவில் பாதித்துள்ளதாம்.


Post your comment





Related News
சுவாதி கொலை சம்பவம் படமானது!
மீண்டும் தள்ளிபோகும் குற்றமே தண்டனை ரிலீஸ்!
மீண்டும் ஆசிரியையாக நடிக்கும் குற்றம் கடிதல் ராதிகா!
வெளிவராத படங்களும் தேசிய விருதுகளும்...!
சிறந்த பிராந்திய மொழிக்கான தேசிய விருதை பெறுகிறது ‘குற்றம் கடிதல்’
காக்கா முட்டை, குற்றம் கடிதல் படங்களுக்கு தேசிய விருது வாய்ப்பு.?!
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் குற்றம் கடிதல், சதுரங்க வேட்டை படத்துக்கு விருது
வெற்றி பெறுவது ஒரு வாடிக்கையாக இருப்பதும் பெருமை - சதீஷ் குமார்
திருக்குறள் 44ஆம் அதிகாரம்!
இந்தியன் பனோரமாவிற்கு தேர்வான ஒரே தமிழ்படம் \'குற்றம் கடிதல்\'!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions