இனி தொடர்ந்து நடிக்க மாஜி முதல்வரின் மனைவி முடிவு!

Bookmark and Share

இனி தொடர்ந்து நடிக்க மாஜி முதல்வரின் மனைவி முடிவு!

குட்டி ராதிகாவை ஞாபம் இருக்கிறதா...? தமிழில், இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது கன்னட படங்களிலும் அதிகம் நடித்துள்ளார். இவருக்கும் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் இடையே ரகசிய திருமணம் நடந்தது. இந்த திருமணம் வெகு நாட்களாக ரகசியமாக இருந்தது.

பின்னர் ஒருகட்டத்தில் இந்த உண்மை தெரியவந்தது. மாஜி முதல்வரின் மனைவி மற்றும் ஒரு குழந்தைக்கு தாயான பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார் குட்டி ராதிகா. பின்னர் படத்தயாரிப்பில் இறங்கியவர், சமீபத்தில் மீண்டும் அம்மன் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.

இந்நிலையில் இனி தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருக்கும் குட்டி ராதிகா, தற்போது நடனத்தை மையமாக வைத்து உருவாக இருக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

தனது கணவர் குமாரசாமி மீண்டும் நடிப்பதற்கு ஓ.கே., சொல்லிவிட்டதாகவும், இதனால் இனி தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருப்பதாகவும் குட்டி ராதிகா தெரிவித்துள்ளார். 


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் "குட்டி தேவதை"..!
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions