பல விருதுகளை பெற்ற குற்றம் கடிதல் ஆஸ்கர் விருதுக்கு செல்கிறது!

Bookmark and Share

பல விருதுகளை பெற்ற குற்றம் கடிதல் ஆஸ்கர் விருதுக்கு செல்கிறது!

குற்றம் கடிதல் படத்தில் மாஸ்டர் அஜய், ராதிகா பிரசிஷ்டா, பாவல் நடித்துள்ளனர். சங்கர் ரங்கராஜன் இசை அமைத்துள்ளார். சமூக விழிப்புணர்வு நாடகங்கள், குறும்படங்களை இயக்கிய பிரம்மா.ஜி இப்ப்டத்தை இயக்கியுள்ளார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கிறிஸ்டி சிலுவப்பன் தயாரித்த படத்தை ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன் சதீஷ்குமார் வாங்கி உள்ளார்.

அதீத புத்திசாலித்தனம் கொண்ட ஒரு மாணவன். அதனாலேயே ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ள அதிலிருந்து அவனை ஒரு ஆசிரியை மீட்கும் 24 மணி நேர கதை. பல சர்வதேச பட விழாக்களில் விருதுகளை குவித்து சிறந்த தமிழ் படமாக தேசிய விருதும் பெற்ற படம். வருகிற 24ந் தேதி பக்ரீத் பண்டிகை அன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில் படத்தை ஆஸ்கர் விருது போட்டிக்கு அனுப்பி வைக்க தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, “சமூக பார்வை கொண்ட படம் இது. பக்ரீத் பண்டிகை அன்று வெளியிடுகிறோம். பல சர்வதேச விருதுகளை பெற்றிருந்தாலும் மிகப்பெரிய விருதான ஆஸ்கர் விருதுக்கும் படத்தை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளேன்.

ஆஸ்கர் விருதுக்கு படங்களை தேர்வு செய்யும் இந்திய குழுவினர் விரைவில் படத்தை பார்க்கிறார்கள்” என்றார்.


Post your comment





Related News
இந்த வருடம் உண்மையாகவே ஹிட் ஆனது இந்த 4 படங்கள் தானாம்
அருண் விஜய்யின் அடுத்த படம்! மீண்டும் அதே கூட்டணி இணைகிறது
குற்றம்-23, துருவங்கள் 16 ஆகிய தரமான படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
இயக்குனர் ஷங்கரிடம் பாராட்டை வாங்கிய அருண் விஜய்!
அண்மையில் வெளியாகி வெற்றிநடைபோடும் படம்- படக்குழுவை நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினி
குற்றம்-23 பிரமாண்ட வசூல்- முழு விவரம்
இளம் நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்
குற்றம்-23 நான்கு நாட்களில் இத்தனை கோடி வசூலா? அருண் விஜய் வேற லெவல்
இயக்குனர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? பிரபல நடிகை உணர்ச்சிவசம்
குற்றம் 23, முப்பரிமாணம், யாக்கை அட்டகாசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions