வித்தியாசமான கதை தேடலில் கே.வி.ஆனந்த்!

Bookmark and Share

வித்தியாசமான கதை தேடலில் கே.வி.ஆனந்த்!

ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்துக்கு கனா கண்டேன், அயன், கோ ஆகிய படங்கள் பெரிய வெற்றிகளை கொடுத்தபோதும், சூர்யாவை இயக்கிய மாற்றான் பலத்த அடி கொடுத்தது. ஆனபோதும், அதையடுத்து தனுஷை வைத்து அனேகன் படத்தை ஹிட்டாக கொடுத்தார்.

இந்தநிலையில், அவர் அடுத்தபடியாக ரஜினிக்கு கதை சொல்லியிருப்பதாக செய்தி வெளியானது. ஆனால், இப்போது மெட்ராஸ் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார். பின்னர், தனது 56வது படத்தில் சிவா இயக்கத்தில் நடிக்கும் அஜீத், 57வது படத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது அஜீத்தின் 57வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக கூறப்படுகிறது.

அதேபோல், தற்போது விஜய்யின் 59வது படத்தை ராஜா ராணி அட்லி இயக்கும் நிலையில், அவரது 60வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்கயிருப்பதாக இன்னொரு செய்தியும் கோலிவுட்டில் பரவியுள்ளது. ஆனால் இந்த செய்தி உறுதிபட வெளியாகவில்லை.

அதேசமயம், அனேகனுக்குப்பிறகு சூர்யாவிடம் கால்சீட் கேட்டார் கே.வி. ஆனந்த். ஆனால் சூர்யா வேறு படங்களை காரணம் காட்டி தட்டிக்கழித்தார். அதன்பிறகு சில பிரபல நடிகர்களை சந்தித்து கே.வி.ஆனந்த் கதை சொன்னதாகவும்,

அதில் அவர்களுக்கு திருப்தி ஏற்படாததால்தான் எதிர்பார்த்த நடிகர்கள் யாருமே கால்சீட் கொடுக்கவில்லை என்றொரு செய்தியும் பரவியுள்ளது. அதனால் தற்போது தனது கதை இலாகாவுடன் சேர்ந்து வித்தியாசமான கதை தேடலில் கே.வி.ஆனந்த் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேருகிறேன்! மஹத் அதிரடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions