கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அஜித் படம் என்னாச்சு?

Bookmark and Share

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அஜித் படம் என்னாச்சு?

கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் சூர்யாவை வைத்து மாற்றான் படத்தையும், தனுஷை வைத்து அனேகன் படத்தையும் இயக்கினார் கே.வி.ஆனந்த். இவ்விரு படங்களுமே பெரியளவில் வெற்றி பெறவில்லை.

குறிப்பாக சூர்யா நடித்த மாற்றான் படத்தைத் தயாரித்தவகையில் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம் என்று சொல்லப்பட்டது. இரண்டு தோல்விப்படங்களைக் கொடுத்தாலும் கே.வி.ஆனந்துக்கு மூன்றாவதாக ஒரு படத்தை இயக்கவும் அட்வான்ஸ் கொடுத்திருந்தனர்.

இந்தமுறையாவது வெற்றிப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அஜித்துக்கு ஒரு கதை பண்ணினார் கே.வி.ஆனந்த். கதையைக் கேட்ட அஜித்துக்கு பிடித்துப்போக, நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக அஜித்தின் சம்பளம் படத்தின் பட்ஜெட், படத்தின் பிசினஸ் போன்ற விஷயங்களைப் பற்றி கல்பாத்தி அகோரத்திடம் ஆலோசனை நடத்தியபோது... இவ்வளவு பெரிய தொகைக்கு படம் எடுத்தால் பிசினஸ் பண்ணுவது கஷ்டம் என்று அபிப்ராயப்பட்ட கல்பாத்தி அகோரம், வேறு ஹீரோவுக்கு கதை பண்ணும்படி சொல்லிவிட்டாராம்.

எனவே அஜித்துக்காக பண்ணிய கதையை பெண்டிங் வைத்துவிட்டு வேறு ஹீரோவுக்காக கதை பண்ணும் வேலையில் இறங்கிவிட்டார் கே.வி.ஆனந்த்.


Post your comment





Related News
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா 37 நாயகி பிரியா இல்லை, வேற - ரகசியத்தை உடைத்த கே.வி.ஆனந்த்.!
கே.வி ஆனந்த் படத்திற்காக 10 நாடுகளுக்கு பறக்கும் சூர்யா - மெர்சலான அப்டேட்.!
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சூர்யா - அதிகாரபூர்வ அறிவிப்பு
சூர்யா-37 படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
சூர்யா 37 படத்தின் இயக்குனரை உறுதி செய்த சூர்யா - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
விஜய் சேதுபதியின் படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டதா?
கவண் படத்தில் குற்றம் சாட்டியது இந்த சேனலை தான்- வெற்றி விழாவில் கூறிய கே.வி.ஆனந்த்
கவண் ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
கவண் படத்தை பாராட்டிய அமெரிக்க போலி ஜனாதிபதி- கபிலன், கே.வி.ஆனந்தின் கலாட்டா ரீப்லே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions