சூர்யா கால்சீட் தராததால் வேறு ஹீரோ தேடுகிறார் கே.வி.ஆனந்த்!

Bookmark and Share

சூர்யா கால்சீட் தராததால் வேறு ஹீரோ தேடுகிறார் கே.வி.ஆனந்த்!

சூர்யாவை வைத்து அயன், மாற்றான் என இரண்டு படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். இதில் அயன் பெரிய வெற்றி பெற்றது. ஆனால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றான் அதிர்ச்சி தோல்வியாகி விட்டது.

ஆனால் அதையடுத்து தனுஷை வைத்து அநேகன் படத்தை இயக்கி ஹிட் கொடுத்து விட்டார். அதைத் தொடர்ந்து அடுத்த படத்திற்காக தயாராகிக்கொண்டிருக்கும் கே.வி.ஆனந்த், தனது ஆஸ்தான கதை வசனகர்த்தாக்களான சுபா என்ற இரட்டையர்களுடன் இணைந்து தற்போது தீவிர கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே தனது அடுத்த படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க நினைத்தவர் அவரிடம் கால்சீட் கேட்டாராம். ஆனால், மாஸ் படத்தை அடுத்து விக்ரம் குமார் இயக்கும் 24 என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சூர்யா, அதன்பிறகு ஹரியின் சிங்கம்-3வில் நடிக்க கால்சீட் கொடுத்திருப்பதால், இப்போதைக்கு கால்சீட் தரஇயலாது என்று கூறி விட்டாராம்.

அதனால் தனது அடுத்த படத்திற்கு மார்க்கெட்டில் இருக்கும் சில மாஸ் ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வருகிறார் கே.வி.ஆனந்த். 

 


Post your comment





Related News
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா 37 நாயகி பிரியா இல்லை, வேற - ரகசியத்தை உடைத்த கே.வி.ஆனந்த்.!
கே.வி ஆனந்த் படத்திற்காக 10 நாடுகளுக்கு பறக்கும் சூர்யா - மெர்சலான அப்டேட்.!
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சூர்யா - அதிகாரபூர்வ அறிவிப்பு
சூர்யா-37 படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
சூர்யா 37 படத்தின் இயக்குனரை உறுதி செய்த சூர்யா - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!
விஜய் சேதுபதியின் படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டதா?
கவண் படத்தில் குற்றம் சாட்டியது இந்த சேனலை தான்- வெற்றி விழாவில் கூறிய கே.வி.ஆனந்த்
கவண் ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
கவண் படத்தை பாராட்டிய அமெரிக்க போலி ஜனாதிபதி- கபிலன், கே.வி.ஆனந்தின் கலாட்டா ரீப்லே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions