கஞ்சத்தனத்தை காமெடியாக சொல்ல வரும் புதுமுக டைரக்டர் எல்.மாதவன்!

Bookmark and Share

கஞ்சத்தனத்தை காமெடியாக சொல்ல வரும் புதுமுக டைரக்டர் எல்.மாதவன்!

சின்னத்திரையின் மணிரத்னம் என்றழைக்கப்படும் நாகாவிடத்தில் உதவியாளராக பணியாற்றி விட்டு, நாலு பேரு நாலு விதமாக பேசுவாங்க என்ற படத்தில் இயக்குனராகியிருப்பவர் எல்.மாதவன்.

சீரியசான ஒரு கதையை காமெடியாக படமாக்கியிருக்கும் அவர், இன்றைக்கு தள்ளுபடி மோகத்தில் திரியும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படம் பற்றி எல்.மாதவன் கூறும்போது,

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க படம் முழுக்க முழுக்க எண்டர்டெய்ன்மென்ட் படம். ஆறில் இருந்து அறுபது வரை என்று சொல்வார்கள். ஆனால் இது அந்த அறுபதையும் தாண்டி நூறு வயதுடையவர்கள் வரை பார்த்து ரசிக்கக்கூடிய முழுநீள நகைச்சுவை படம்.

காதல் காமெடியில் செல்லும் இந்த படத்தின் மையக்கரு கஞ்சத்தனத்தை பிரதானமாக கொண்டுள்ளது. அதாவது ஒரு சின்ன கஞ்சத்தனத்தினால் எவ்வளவு பெரிய பிரச்சினையும் வரலாம் என்பதுதான் கதையின் மையம். இந்த படத்தில் இந்திரஜித் என்ற புதியவர் ஹீரோவாக நடிக்கிறார்.

அவருடன் தேவிகா மாதவன், சிங்கமுத்து, சுவாமிநாதன், சிவசங்கர் மாஸ்டர் என பலர் நடிக்கிறார்கள். குறிப்பாக சிவசங்கர் மாஸ்டருக்கு இதில் வெயிட்டான வேடம். கதாநாயகியின் அப்பாவாக நடித்துள்ள அவருக்கு பிளாஷ்பேக் காட்சிகளெல்லாம் இருக்கிறது.

மேலும், இந்த படத்தைப்பொறுத்தவரை நடிகர்களால் காமெடி என்பதை விட ஸ்கிரிப்ட்டே பக்கா காமெடியானது. குறிப்பாக, இந்த படத்தில் கஞ்சத்தனத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் கதாபாத்திரங்களுக்கு சீரியசாக இருந்தபோதும், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அது காமெடியாகத்தான் இருக்கும்.

ஆனால் என்ன நடக்கப்போகிறது என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு கதை நகரும். அதிக கஞ்சத்தனம் செய்பவர்களுக்கு, அளவுக்கதிகமாக கஞ்சத்தனம் செய்யக்கூடாது. தேவையான விசயங்களை கஞ்சத்தனம் பார்க்காமல் செய்துதான் ஆக வேண்டும் என்பது போன்ற ஒரு புரிதல் ஏற்படும். குறிப்பாக, சமீபகாலமாய் தள்ளுபடி விலை என்று எந்த பொருளில் போட்டிருந்தாலும் அதை உடனே வாங்கி விடுகிறார்கள் மக்கள்.

ஆன்லைனில் ஒரு பொருளை தள்ளுபடி விலையில் வாங்குகிறார்கள். ஆனால், அதை அவர்கள் பிரித்துப் பார்ப்பதற்குள்ளேயே பொருளை கொண்டு வந்து கொடுத்தவன் சென்று விடுகிறான். அதன்பிறகு பிரித்துப்பார்த்தால் அந்த பொருள் டேமேஜாக இருக்கிறது. அதேபோல், பல வருடங்களுக்கு முந்தைய பொருளை தள்ளுபடி விலை என்று இன்றைய ரேட்டுக்கு விற்பனை செய்கிறார்கள்.

அதன் தரத்தை பார்க்காமலே தள்ளுபடி என்பதை மட்டுமே மனதில் கொண்டு போட்டி போட்டு வாங்குகிறார்கள் மக்கள். இந்த சீரியசான விசயத்தைதான் காமெடியாக சொல்லியிருக்கிறேன். மேலும், ஏ.கே.ரிஷால் சாயின் இசையில், யுகபாரதி எழுதிய பாடல்களை கானா பாலா, ஹரிசரன், வேல்முருகன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள் அனைத்து பாடல்களுமே படத்துக்கு பெரிய பலமாக வந்திருக்குகிறது.

ஏற்கனவே யுகபாரதி எழுதிய ஊதா கலரு ரிப்பன் பாடல்களுக்கு இணையாக இந்த படத்தின் பாடல்களும் ஹிட்டாகும். அத்தனை அற்புதமாக பாடல்கள் வந்திருக்கிறது என்று கூறும் இயக்குனர் எல்.மாதவன், நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க படம் கோடை விடுமுறையில் ரசிகர்களை சந்திக்க வருவதாக சொல்கிறார்.  


Post your comment

Related News
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் பிறந்தநாளில் லோக்கலாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions