பிலிம் சேம்பர்’ தலைவராக எல்.சுரேஷ் தேர்வு

Bookmark and Share

பிலிம் சேம்பர்’ தலைவராக எல்.சுரேஷ் தேர்வு

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தேர்தல் சென்னையில் உள்ள திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில்  நேற்று நடந்தது. இந்த தேர்தலில் எல்.சுரேஷ் 1,259 ஓட்டுகள் பெற்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆனந்தா பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் `பில்லா' படத்தை தயாரித்தவர்.

இந்த நிறுவனம் `நாடோடி மன்னன்', `ஒளிவிளக்கு', `மனோகரா' உள்பட 700-க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது. துணைத்தலைவர்களாக சாய்பிரசாத், ஏ.கணேஷ், வி.பி.மாதவன் நாயர், ஏ.வி.எம்.கே.சண்முகம் ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயலாளர்களாக ரவி கொட்டாரக்கரா, என்.ராமசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வானார்கள்.  பொருளாளராக கே.கிருஷ்ணா ரெட்டி தேர்வு செய்யப்பட்டார்.

செயற்குழு உறுப்பினர்களாக குட்டி பத்மினி, கே.எஸ்.ராமகிருஷ்ணா, பி.ரவிகுமார், வெங்கடாத்ரி, கே.நந்தகுமார், கோபால்தாஸ்,  ஜெகநாததாஸ், டி.எஸ்.ராம்பிரசாத், அம்பிகாபதி, ஜெயசிம்மலு, சீனிவாசன், சத்யசீலன் உள்பட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions