பாப் பாடகி லேடி ககாவுக்கு திருமணம்

Bookmark and Share

பாப் பாடகி லேடி ககாவுக்கு திருமணம்

பிரபல கவர்ச்சி பாப் பாடகி லேடி ககா. கனடாவை சேர்ந்தவர் இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இவருக்கு உலகம் முழுவதும் சுமார் 75 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இவர் 28 வயது ஆலிவுட் நடிகர் டெய்லர் கின்னி என்பவரை மணக்கிறார்.

அதற்கான நிச்சயதார்தம் சமீபத்தில் நடந்தது. இந்த தகவலை லேடி ககா இணையதளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நிச்சயதார்த்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் தனது தாயாரின் திருமண ஆடையை அணிந்திருந்தார். அவருக்கு இருதய வடிவ மோதிரத்தை டெய்லர் கின்னி வழங்கினார். தங்களது காதல் குறித்து லேடி ககா தெரிவித்துள்ளார்.

‘‘கடந்த 2011–ம் ஆண்டு நெப்பராஸ்காவில் நடந்த ‘யூ அண்டு ஐ’ என்ற வீடியோ வெளியீடு நடந்த போது டெய்லர் கின்னியை சந்தித்தேன். அதை தொடர்ந்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் காதலர் தினத்தன்று டெய்லர் கின்னி தனது இதயம் திறந்து என்னை காதலிப்பதாக கூறினார். அதை நானும் ஏற்றுக் கொண்டேன். திருமணத்துக்கு தயாராகி விட்டோம்’’ என்றார்.


Post your comment





Related News
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவுக்கே இத்தனை கோடி தான் சம்பளமா? ரகுல் பிரீத் சிங் ஷாக்
பிரபல இயக்குனரின் படத்தில் கமிட்டான நயன்தாரா - குஷியில் ரசிகர்கள்.!
முதிர்ச்சியான வேடம் கொடுத்தாலும் நடிக்க தயார்-ஆண்ட்ரியா..!
தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு ஏமாற்றிவிட்டு ஓடினார் :பிரபு தேவா தந்தை மீது பரபரப்பு புகார்
பாடகி லேடி காகாவின் கணவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions