ராஜ்மோகன் படத்தில் அன்னக்கொடி லட்சுமண் நடிக்கிறார்!

Bookmark and Share

ராஜ்மோகன் படத்தில் அன்னக்கொடி லட்சுமண் நடிக்கிறார்!

ராமகிருஷ்ணன் நடித்த குங்குமப் பூவும் கொஞ்சி புறாவும், கிருஷ்ணா நடித்த வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களை இயக்கியவர் ராஜ்மோகன். இந்த படங்களில் கிருஷ்ணா-மா.க.பா.ஆனந்த் இணைந்து நடித்த வானவராயன் வல்லவராயன் அவருக்கு ஹிட் படமாக அமைந்தது.

விளைவு, தனது அடுத்த படத்தை உடனடியாக தொடங்கி விட்டார் ராஜ்மோகன். பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் அறிமுகமான லட்சுமண் இந்த படத்தில் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்து வருகிறது.

மேலும், தம்பி ராமைய்யா, எஸ்.பி.பி.சரண் உள்பட பல கமர்சியல் நடிகர் நடிகைகளும் நடிக்கியிருக்கிறார்களாம். முந்தைய இரண்டு படங்களில் இருந்தும் மாறுபட்ட கதையில், அதாவது மலைசார்ந்த ஒரு வித்தியாசமான கதையில் இப்படத்தை படமாக்குகிறாராம் ராஜ்மோகன்.

ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இப்படத்தை க்ளீன் எண்டர்டெய்ன்மென்ட் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர் தீபா அய்யர் என்கிற துபாய் தொழிலதிபர் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறாராம்.

 


Post your comment





Related News
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
தளபதி-62 படத்தில் இணைந்த முன்னணி பிரபலங்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
திரையரங்குகளில் பட்டையை கிளப்பிவரும் போகன் முதல் நாள் வசூல்
எம்ஜிஆர் பெயரில் மாமனிதர் விருது!- சித்ரா லட்சுமணன் கோரிக்கை
நடிகர் பிரபு லக்‌ஷ்மணன் மரணம்!
வெண்ணிலா கபடி குழு பார்ட் 2வில் அன்னக்கொடி லக்ஷ்மன்
யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்க மாட்டேன் - லட்சுமணன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions