யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்க மாட்டேன் - லட்சுமணன்!

Bookmark and Share

யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்க மாட்டேன் - லட்சுமணன்!

'அன்னக்கொடி' படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் லட்சுமணன். முதல்படம் அவருக்கு வெற்றியை தரவிட்டாலும், ஜீவா படம் அவருக்கு நல்லதொரு அடையாளத்தை பெற்று தந்தது.

தற்போது, 'கிட்ணா' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் லட்சுமணன், நம்மிடம் பேசியதாவது, பாரதிராஜா படத்தில் அறிமுகமானது தமிழ் சினிமாவில் எனக்கு கிடைத்த முதல் முகவரி. சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஜீவா படம் நல்ல நடிகன் என்ற பெயரை பெற்று தந்தது.

இதனையடுத்து சமுத்திரகனியின் ’கிட்ணா’ படத்தில் அவரது மகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னால் முடியும் என்று நம்பி என்னை நடிக்க வைத்தால், சிறந்த நடிப்பை என்னால் வெளிப்படுத்த முடியம்.

நான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்க மாட்டேன், ஏனென்றால் நான் கூச்ச சுபாவம் உடையவன். நல்ல வாய்ப்பிற்காக மட்டுமே காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions