நடிப்பை விட படிப்பை தொடரவே விரும்புகிறேன் - லட்சுமி மேனன் பேட்டி!

Bookmark and Share

நடிப்பை விட படிப்பை தொடரவே விரும்புகிறேன் - லட்சுமி மேனன் பேட்டி!

கும்கி படத்தில் தொடங்கி  ஜிகர்தண்டா படம் வரை தான் நடித்த படங்களில் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை பக்காவாக நடித்து தமிழ் ரசிகர்களின் இதயங்களில் பச்சக்கென ஒட்டிக்கொண்டவர் நடிகை லட்சுமி மேனன்.

பார்க்கத்தான் இவர் குட்டிப்பெண் போன்று இருப்பார், ஆனால் குட்டியாக இருந்தாலும், பட்டி தொட்டியெல்லாம் பெயர் எடுத்தவர் லட்சுமி மேனன். கொம்பன் படத்தில் லட்சுமி மேனன் நடிப்பை பார்த்தவர்கள், இப்படி ஒரு மகள் நமக்கு கிடைக்கமாட்டாரா.? இப்படியொரு மனைவி நமக்கு அமையமாட்டாரா.? என்று ஏங்க வைத்துள்ளார்.

கொம்பன் படத்தில், அம்மி அரைப்பதில் தொடங்கி அப்பாவுக்கு நல்ல மகளாக, கணவருக்கு நல்ல மனைவியாக, எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக பள்ளிக்கு போய் வருகிற கேரக்டரில் லட்சுமி மேனனை பார்க்கும் போது, ஏதோ பக்கத்து வீட்டு பெண் போன்று தோன்றி அசால்ட்டாக நடித்து அசத்தியுள்ளார் லட்சுமி மேனன்.

கொம்பன் படம் ரிலீஸாகியுள்ள நிலையில், படம் ரிலீஸானது கூட தெரியாமல் ப்ளஸ்-2 தேர்வில் பிஸியாக, சினிமா எல்லைக்கு  அப்பாற்பட்டு இருந்த லட்சுமி மேனனை தொடர்பு கொண்டு, கொம்பன் படம் அனுபவம் குறித்து கேட்டோம்.

அவர் அளித்த மினி பேட்டி இதோ...

படிப்பெல்லாம் எப்படி போகிறது...?

ப்ளஸ் -2 தேர்வு எழுதி வருகிறேன். இன்னும் ஒரு தேர்வு பாக்கியுள்ளது. தேர்வு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. கடைசி நேரத்தில் படித்து ஏதோ கொஞ்சம் எழுதியுள்ளேன். மார்க் வந்த பின்னர் தான் தெரியும், தொடர்ந்து படிப்பை தொடர ஆசைப்படுகிறேன்.

கொம்பன் படம் பற்றி...?

குட்டி புலி படத்தின் போதே முத்தையாவுடன் எனக்கு நல்ல அறிமுகம் இருந்தது. திரும்பவும் என்னை கிராமத்து பக்கம் கொண்டு போய் உள்ளார். கிராமத்து சப்ஜெக்ட் என்றாலே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும், ஏனென்றால், அங்கு பெரிய வசதிகள் எதுவும் இருக்காது. இருந்தாலும் அதையும் தாண்டி கஷ்டப்பட்டு நடித்தேன். நான் கேரளத்து நடிகை என்றாலும் தமிழ்நாட்டு நடிகையாகத்தான் என்னை பார்க்கிறார்கள். அதைத்தான் ரசிகர்களும் விரும்புகிறார்கள்.

கொம்பன் படம் பல தடைகளை கடந்து ரிலீஸாகியுள்ளது. படம் நன்றாக வந்திருப்பதாகவும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். இதை கேட்கும் போது சந்தோஷமாக உள்ளது. கொம்பன் படத்தில் அப்பா-மகள் பாசம், மாமனார்-மருமகன் பாசத்தை அருமையாகவும், அழகாகவும் படமாக்கியுள்ளார் இயக்குநர் முத்தையா.

கார்த்தியுடன் நடித்த அனுபவம் பற்றி...?

கொம்பன் படத்தில் கார்த்திக்கு எனக்கு நிறைய உதவினார். டயலாக் எப்படி உச்சரிக்கணும் உள்ளிட்ட சின்ன சின்ன விஷயங்களை சொல்லி கொடுப்பார். அதேசமயம் நடிப்பில் தலையிடமாட்டார். அப்பாவாக நடித்த ராஜ்கிரண், கணவராக நடித்த கார்த்தி, இந்த இரண்டு கேரக்டர்களையும், உணர்வுகளையும் நிஜவாழ்க்கையில் நான் உணர்ந்ததில்லை.

எந்தப்படத்தில் நடித்தாலும் அந்தப்படம் நன்றாக வருமா.? வெற்றி பெறுமா.? என்றெல்லாம் நான் பார்க்க மாட்டேன், யோசிக்க மாட்டேன். அந்த படத்தை முடித்து கொடுத்துவிட்டு நான் சென்று விடுவேன். கொம்பன் படத்திலும் அப்படி தான் பழனி என்ற கேரக்டரில் நடித்தேன். ரசிகர்கள் என் நடிப்பை அங்கீகரித்தார்கள் என்றால் அந்த பெருமை எல்லாம் இயக்குநர் முத்தையாவைத்தான் சேரும்.

அடுத்த படங்கள் குறித்து...?

கொம்பன் படத்திற்கு பிறகு எனது நடிப்பில் சிப்பாய் படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்துவிட்டது. இந்தப்படத்திற்கு பிறகு தமிழில் வேறு எந்த படத்திலும் நான் கமிட்டாகவில்லை. படிப்பை தொடரவே விரும்புகிறேன்.

இவ்வாறு லட்சுமி மேனன் கூறினார்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions