சினிமாவுக்கு முழுக்குப்போடவில்லை! லட்சுமிமேனன் விளக்கம்!

Bookmark and Share

சினிமாவுக்கு முழுக்குப்போடவில்லை! லட்சுமிமேனன் விளக்கம்!

சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன்.  இந்தப் படத்தின்  வெற்றியை தொடர்ந்து கும்கி, குட்டிப்புலி, பாண்டிய நாடு, ஜிகர்தண்டா,  மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களில் நடித்தார்! இப்படங்களை தொடர்ந்து கொம்பன் சிப்பாய் படங்களில் நடித்து வருகிறார் லட்சுமி மேனன்.

இந்நிலையில், தனக்கு கிராமத்து வேடங்கள், போரடித்து விட்டது என்றும், அதனால் நடிப்புக்கு குட்-பை சொல்லிவிட்டு, இனி படிப்பிலும், இசையிலும் கவனம் செலுத்தப் போகிறேன் என்றும், அதனால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளேன் என்றும் லட்சுமி மேனன் கூறியதாக செய்திகள் வெளியாகின! இது குறித்து லட்சுமிமேனனிடம் கேட்டால், அப்படி நான் எந்த பத்திரிகைக்கும் பேட்டி கொடுத்ததும் இல்லை, அதில் கூறப்பட்டுள்ளது மாதிரி நான் சொன்னதும் இல்லை! என்று மறுக்கிறார்.

கொம்பன் படத்தில் நடித்து முடித்த கையோடு, ப்ளஸ்-டூ பரீட்சை எழுத வேண்டி இருப்பதால் அதற்கு என்னை தயார் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு சிறிய இடைவெளியை நானாக ஏற்படுத்திக் கொண்டது உண்மைதான்! தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால், பள்ளிக்கு சென்று படிப்பை கவனிக்க முடியவில்லை.

அதனால் பரீட்சை நெருங்கும் சமயத்திலாவது நடிப்புக்கு ஒரு பிரேக் கொடுத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். அதனால்தான் வேறு படங்களில் கமிட் ஆகவில்லை! ப்ளஸ்-டூ பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக சினிமாவில் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கோண்டேன்! ஏப்ரல் 6-ஆம் தேதி வரைக்கும் ப்ளஸ்-டூ பரீட்சை இருக்கிறது. அதை முடித்துக் கொண்டதும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க இருக்கிறேன்.

ஒரு சில கதைகளை கேட்டும் வைத்திருக்கிறேன். எல்லாம் ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு பிறகு முடிவு செய்யலாம் என்று அந்த படங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியுள்ளேன்! அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

மற்றபடி எனக்கு கிராமத்து கேரக்டர்களில் நடித்து போரடித்து விட்டது என்றும், அதனால் சினிமாவிலிருந்து விலகி படிப்பிலும், இசையிலும் கவனம் செலுத்து போகிறேன் என்று நான் சொன்னதாக வந்த செய்தி உண்மையில்லை! லிட்டரேச்சருக்கு படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்! அதை நான் நடித்துக் கொண்டே செய்வேன்! அதற்காக சினிமாவை கைவிடும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை! என்றும் விளக்கம் அளித்திருக்கிறார் லட்சுமி மேனன்! 


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions