பில்டர் காபிக்காக பாடிய லட்சுமிமேனன்

Bookmark and Share

பில்டர் காபிக்காக பாடிய லட்சுமிமேனன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்று பெயர் வாங்கினாலும், திறமையான பாடகியாகவும் சினிமாவில் கால் ஊன்றினார் லட்சுமி மேனன். ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ என்ற படத்தில் இவர் பாடிய ‘குக்குரு குக்குரு’ என்ற பாடல் பட்டி, தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. பின்னர் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கிய லட்சுமிமேனன், தற்போது மீண்டும் பாடத் தொடங்கியிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் ராகவ், இயக்கத்தில் உருவாகும் ‘பில்டர் காபி’ என்ற படத்திற்கு லட்சுமிமேனன் ஒரு பாடல் பாடியிருக்கிறார். ராமசுப்பிரமணியம் இசையில் உருவாகியிருக்கும் இந்த பாடலின் முதல் வரி ‘காபி பெண்ணே’ என்று தொடங்குவதாக அமைந்துள்ளது.

இந்த பாடல் வரிகளை சேஷா என்பவர் எழுதியுள்ளார். இப்படத்தின் பிற வரிகள் காபியின் பல வகைகளை குறிப்பிடுவதாக அமைந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். 

இந்த பாடலை பாடியது லட்சுமிமேனனுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. லட்சுமிமேனன் தற்போது அஜித் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து வருகிறார் என்பது குறிப்படத்தக்கது.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions