ப்ளஸ் 2 தேர்வில் லட்சுமி மேனன் பெயிலானதாக வதந்தி

Bookmark and Share

ப்ளஸ் 2 தேர்வில் லட்சுமி மேனன் பெயிலானதாக வதந்தி

ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோதே சினிமாவுக்கு வந்தவர் நடிகை லட்சுமி மேனன். கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான லட்சுமி மேனன், சுந்தரபாண்டியனில் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த கொம்பன் படம் வரை வெற்றி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கொம்பன் மற்றும் சிப்பாய் படங்களை முடித்து விட்டு கேரளா சென்றவர் அதன்பின் சினிமா என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு புத்தகமும் கையுமாக அலைந்து கொண்டிருந்தார்.

காரணம் ப்ளஸ் தேர்வுக்காக தீவிர படிப்பில் இறங்கினார். இதனால் சினிமாவுக்கு அவர் முற்றிலுமாக முழுக்கு போட்டுவிட்டதாக கூட ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்தார் லட்சுமி மேனன்.

தொடர்ந்து ஒரே மாதிரியாக நடித்து போரடித்து விட்டதும் என்றும், ப்ளஸ் 2 தேர்வுக்காகவும் சினிமாவை சில காலம் தள்ளி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தசூழலில் தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதேப்போல் கேரளாவிலும் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி இருப்பதாகவும், லட்சுமி மேனன் 857 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும், ஆனால் கணித பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்ததாகவும் மாலை முதல் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

ஆனால் இதுப்பற்றி லட்சுமி மேனன் தரப்பில் விசாரித்த போது, அது பொய்யான செய்தி என தெரியவந்தது. தற்போது லட்சுமி மேனன், வீரம் சிவா இயக்கத்தில், அஜித்தின் தங்கையாக நடிக்க இருக்கிறார் என்றும், இன்னும் அவருக்கு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இதுபோன்ற பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று லட்சுமி மேனன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன்னர் லட்சுமி மேனன், 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த சமயத்திலும் அவர் பெயிலானதாக பொய்யான செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions