நான், ரொம்ப முன் கோபக்காரி: லட்சுமி மேனன்

Bookmark and Share

நான், ரொம்ப முன் கோபக்காரி: லட்சுமி மேனன்

தமிழில் பிடித்த ஹீரோக்கள்யாரும் இல்லை 'சினிமாவே வேண்டாம்' என்ற வார்த்தையை உதிர்த்து விட்டு, தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்ட லட்சுமி மேனனை தேடிப்பிடித்து, 'என்னாச்சு பொண்ணுக்கு? என, கேள்விக்கணைகளை தொடுத்தோம்.  தன் ஆதங்கத்தையும், ஆசைகளையும், ஆவேசத்துடன் அடுக்கடுக்காக கொட்டித் தீர்த்தார்.  மலையாளம் கலந்த தமிழில் நம்முடன் அவர் பேசியதிலிருந்து... 

கோலிவுட்டின் செல்லப் பிள்ளையான நீங்கள், திடீரென சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக கூறியது ஏன்?

சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக ஒருபோதும் கூறவில்லை. சிலர், இதை தவறாக புரிந்து கொண்டு விட்டனர். தொடர்ந்து நடித்து வருவதால், எனக்கு ஒரு பிரேக் தேவைப்படுகிறது. படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்த நினைக்கிறேன். மேலும், ஒரே மாதிரி கிராமத்து பின்னணியில் அமைந்த கதைகள் தான் தொடர்ந்து எனக்கு கிடைக்கின்றன; இதில் விருப்பம் இல்லை. வித்தியாசமான வேடங்கள் கிடைத்தாலோ, என் தோற்றத்தை மாடர்னாக காட்டும் வேடங்கள் கிடைத்தாலோ தொடர்ந்து நடிப்பேன். மற்றபடி, எனக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை; ஆசையும் இல்லை. 

தமிழ் சினிமாவில், 'நம்பர் 1'இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லையா? 

பட வாய்ப்புகளுக்காக நான் யாரையும் தேடிப் போனது இல்லை. என்னை தேடி வந்த வாய்ப்புகளில் மட்டுமே நடித்தேன். அதில், சில படங்கள் நன்றாக அமைந்தன. 'நம்பர் 1' இடத்தை பிடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. எனக்கென தனியாக ரசிகர் கூட்டம் உள்ளது என்ற நம்பிக்கையில்லை. இன்னிக்கு என் படம் ஹிட்;  எனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. நாளை மற்றொரு நடிகை படம், 'ஹிட்'டானால், அவங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க; இது சினிமா வரலாறு. 

விஜய், அஜித் படங்களில் நடிக்க வாய்ப்பு  கிடைக்கவில்லையா? 

அந்த வாய்ப்பு எனக்கு ஏன் கிடைக்கவில்லை என, தெரியவில்லை. நானும், அதற்காக முயற்சி எடுக்கவில்லை. 

சினிமாவை பற்றி என்னதான் தெரிந்து வைத்துள்ளீர்கள்? 

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் நான் வரவில்லை. வாய்ப்புடன், அதிர்ஷ்டமும் எனக்கு தோதாக அமைந்தது. இதனால், ஜெயிச்சுக்கிட்டே இருந்தேன். சினிமா மீது எனக்கு பைத்தியம் இல்லை. அந்த பட வாய்ப்பு போய்விடுமோ, இந்த பட வாய்ப்பு போய் விடுமோ என்ற கவலை இல்லை.  நான் சென்னையில் வசிக்கவில்லை; கேரளாவில் தான் வசிக்கிறேன். நான் எடுக்கும் முடிவுக்கு, என் குடும்பத்தினர் ஒத்துழைக்கின்றனர். 

சினிமாவில் நீங்க நினைத்த எதுவும் நடக்கவில்லை என்ற ஆதங்கம் உண்டா? 

சினிமாவில், எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. 'கும்கி'யில் நடித்தபோது, 'பெரிய படங்கள் கிடைக்கும்; பெரிய நடிகையா பேசப்படுவோம்' என, நினைக்கவில்லை. வெற்றி, தோல்வி, பரபரப்பு என, எந்த நிலையிலும் அமைதியை மட்டுமே பின்பற்றினேன். 

ஒரே மாதிரி காஸ்ட்யூமில் நடிப்பது தான் உங்களுக்கு வெறுப்பை தந்துவிட்டதா? 

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, பாவாடை, தாவணி என்னோட உடை. கேரளாவில் இந்த மாதிரி காஸ்ட்யூம் எங்கேயும் பார்க்க முடியாது. நான் எப்பவும்  'கேஸ்வல்' உடைகளைத் தான் அணிவேன். அந்த மாதிரியான சாதாரண உடைகளில் கூட, இங்கு நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உண்டு. போர் அடிச்சிடுச்சி;  'போதும்பா' அப்படின்னு ஆயிடுச்சி. 

உங்க பிளஸ், மைனஸ் என்ன?

நான், ரொம்ப முன் கோபக்காரி. என்னை ஏதாவது சொல்லிவிட்டால், பொசுக்குன்னு கோபம் வந்திடும். பிளஸ்ன்னா,  நான் 'ஈசி'யா எல்லாரிடமும் பழகிடுவேன்; என்னை எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி நடந்துப்பேன். 

மனம் கவர்ந்த  நடிகர் யார்?

ரன்பீர், அமீர் கான் போன்ற இந்தி நடிகர்ளை ரொம்ப பிடிக்கும். தமிழில் எனக்கு பிடித்த ஹீரோக்கள் யாருமில்லை. 

தமிழகத்தில் உங்களுக்கு என்ன தான் பிடிக்கும்?

எனக்கு சென்னை சாப்பாடு சுத்தமா பிடிக்காது; நான் சுத்த சைவம். அதனால், கேரள சாப்பாடு எங்கு கிடைக்குதோ, அங்கு வாங்கி வந்து தருவர். அப்படி இல்லையென்றால், எங்க பாட்டி, எனக்கு கேரள சாப்பாடு சமைத்து தருவாங்க. தமிழகத்தில், யாரும் என்னை மலையாள பெண்ணாக பார்க்கவில்லை. தமிழகத்தை சேர்ந்த பெண்ணாகவே பார்த்தனர். என்னுடைய தோற்றம், தமிழ் பெண் போல் இருந்தது தான் இதற்கு காரணம். என்னை இப்படி மாற்றிய பெருமை, தமிழ் திரைப்பட இயக்குனர்களையே சேரும். 

உங்களைப் பற்றி ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ வெளியான பின் தான், இப்படி ஒரு முடிவு எடுத்தீங்களா?

அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. அதைப்பற்றி பேசவே அசிங்கப்படுகிறேன்.  வேற கேள்வி கேளுங்க பதில் சொல்றேன். 

உங்களின், 'பிரேக்'கிற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா?அதாவது, காதல், கீதல்...

அய்யோ, நான் பிளஸ் 2 படிக்கிற பொண்ணுங்க. நானே விரும்பித் தான் இந்த முடிவை எடுத்தேன். நீங்கள் நினைப்பது போல், காதல், கத்திரிக்காய் எதுவுமில்லை. 


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions