லட்சுமிமேனனின் தாலி செண்டிமென்ட்!

Bookmark and Share

லட்சுமிமேனனின் தாலி செண்டிமென்ட்!

கார்த்தியுடன் நடித்துள்ள கொம்பன் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே பாவாடை தாவணி உடுத்தி, ரெட்டை ஜடை போட்டுக்கொண்டு கிராமத்து பெண்ணாக நடித்துள்ள லட்சுமிமேனன், கார்த்தியை திருமணம் செய்து கொண்ட பிறகு ராமநாதபுரம் வட்டாரத்து குடும்பப் பெண்களைப்போன்று புடவை கட்டிக்கொண்டு நடித்துள்ளார்.

அதோடு, இதற்கு முந்தைய சில படங்களில் மதுரை வட்டார பெண்ணாக மாறி நடித்த லட்சுமிமேனன் இந்த படத்தில் ராமநாதபுரம் பெண்களைப்போலவே கெட்டப் மட்டுமின்றி நடிப்பிலும் பின்னி எடுத்திருக்கிறாராம்.

அப்படி அவர்களை மாதிரி நடிக்க வேண்டும் என்பதற்காக, அந்த படத்தில் அந்த ஏரியாவைச்சேர்ந்த ஏராளமானோர் நடித்திருப்பதால் அவர்களிடம் பெரும்பாலான நேரத்தை செலவிட்ட லட்சுமிமேனன், அந்த ஊர் பேச்சு, நடை உடைகளையும் அப்படியே உள்வாங்கிக்கொண்டு நடித்தாராம்.

இதற்கெல்லாம் மேலாக, கிராமத்து பெண்கள் இன்றும் புனிதமாக கருதும் மஞ்சள் தாலியை அணிந்து கொண்டு நடித்துள்ள லட்சுமிமேனன், அந்த தாலிக்கு கொடுக்கிற மரியாதையும் சில காட்சிகளில் செண்டிமென்டாக படமாக்கப்பட்டுள்ளதாம்.

அதனால், இதுவரை தான் நடித்த படங்களை விட கொம்பன் படம் வரும்போது குடும்பப் பெண்கள் மத்தியில் தனக்கு ரொம்ப நல்ல பெயர் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார் லட்சுமிமேனன்.

 


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions