கல்லூரியில் இடம் கிடைத்தது- நடித்துக் கொண்டே படிப்பேன்: லட்சுமி மேனன்

Bookmark and Share

கல்லூரியில் இடம் கிடைத்தது- நடித்துக் கொண்டே படிப்பேன்: லட்சுமி மேனன்

லட்சுமிமேனன் பிளஸ்–2 தேர்வில் பாஸ் ஆனார். கல்லூரியில் சேர்ந்து படிக்கப் போவதாகவும் அறிவித்தார்.

கேரள மாநிலம் தேவாராவில் உள்ள எஸ்.எச்.கல்லூரியில் அவருக்கு சீட் கிடைத்துள்ளது. பி.ஏ. ஆங்கிலத்தில் சேர்ந்துள்ளார். வகுப்புகள் விரைவில் துவங்க உள்ளது.
இது குறித்து லட்சுமி மேனன் கூறும்போது, ‘‘நடித்துக் கொண்டே படிக்கவும் முடிவு செய்துள்ளேன். இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுப்பேன்.

ஆரம்பத்தில் பேஷன் டிசைனிங் படிக்கத்தான் திட்டமிட்டேன். என் அம்மா பட்டப்படிப்பை முடித்துவிடும்படி சொன்னார். அதனால் தான் பி.ஏ. ஆங்கிலத்தில் சேர்ந்துள்ளேன்’’ என்றார்.

லட்சுமிமேனன் தற்போது அஜித் படத்தில் நடித்து வருகிறார். இதில் தங்கை கேரக்டரில் வருகிறார். கவுதம் கார்த்திக் ஜோடியாக சிப்பாய் படத்திலும் நடிக்கிறார். மேலும் பட வாய்ப்புகள் வருகின்றன.

கல்லூரி திறந்த பிறகு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வகுப்புக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions