கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாம் லட்சுமிமேனன்!

Bookmark and Share

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாம் லட்சுமிமேனன்!

ஜிகர்தண்டாவுக்கு பிறகு படவாய்ப்பு இல்லாமல் இருந்தார் லட்சுமிமேனன். அப்போது குட்டிப்புலி டைரக்டர் முத்தையா தனது கொம்பன் படத்திற்கு மீண்டும் அவரை புக் பண்ணினார்.

ஆக, அந்த படத்திலும் கிராமத்து கெட்டப்பில் நடித்து மீண்டும் தன்னை தக்க வைத்துக்கொண்டார் லட்சுமிமேனன். ஆனால், அந்த படத்திற்கு பிறகு அவர் பரீட்சைக்காக கேரளா சென்றவர், பின்னர் கல்லூரி படிப்பை தொடரப்போவதாகவும் சொன்னார்.

அதனால் அவர் சொல்லும் தேதியில் படப்பிடிப்பு நடத்துவது இயலாத காரியம் என்று லட்சுமிமேனனை நடிக்க வைக்க நினைத்திருந்த சில டைரக்டர்கள் வேறு நடிகைகள் பக்கம் தாவினர்.

அதனால்தான் கல்லூரிக்கு ரெகுலர் கிளாஸ் செல்லாமல் ஒரு கோர்ஸ் எடுத்து படித்துக்கொண்டே சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் தங்கையாக நடித்துக்கொண்டிருக்கிறார் லட்சுமிமேனன்.

அதோடு தங்கை வேடத்திலும் தனது வழக்கமான முத்திரையை பதித்துக்கொண்டு வரும் அவரிடத்தில், தங்கையாக நடித்த பிறகு கதாநாயகியாக நடிப்பது கடினம் என்று கோலிவுட்டின் சென்டிமென்ட்டை கூறி சிலர் அவரை அச்சுறுத்துகிறார்களாம்.

ஆனால் அதைக்கேட்டு துளியும் அஞ்சவில்லையாம் லட்சுமிமேனன். தங்கை வேடம் என்றாலும் நான் நடிப்பது அஜித் படம். அதோடு, அந்த படம் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக்கொண்ட கதை.

அந்த வகையில் பார்க்கப்போனால், கதைப்படி நான்தான் கதாநாயகி. அதனால் அதை காரணம் காட்டி எனக்கு மீண்டும் கதாநாயகி வாய்ப்பு தர எந்த இயக்குனர்களும் தயங்கமாட்டார்கள். அந்த வகையில், நான் கோடம்பாக்கத்தில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை என்கிறாராம் லட்சுமிமேனன்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions