சினிமா விழாக்களுக்கு நோ சொல்லும் லட்சுமிமேனன்!

Bookmark and Share

சினிமா விழாக்களுக்கு நோ சொல்லும் லட்சுமிமேனன்!

நடிகர் நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களில் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற சட்டதிட்டங்கள் சினிமா வட்டாரங்களில் உள்ளது. ஆனபோதும் அஜித், நயன்தாரா, த்ரிஷா போன்றோர் அதை பின்பற்றுவதில்லை.

மற்றபடி அனைத்து நடிகர் நடிகைகளுமே தாங்கள் நடிக்கும் படங்களில் ஆடியோ விழா உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்கள். இதில் லட்சுமிமேனனைப் பொறுத்தவரை, தான் நடிக்கும் படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்.

அதோடு தான் ஒவ்வொரு படங்களிலும் பணியாற்றிய அனுபவத்தை மீடியாக்களிடம் பகிர்ந்து கொண்டும் வருகிறார். ஆனால், கொம்பன் படத்தின் ஆடியோ விழாவில் மட்டும் பரீட்சை காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், அடுத்தபடியாக சிலரிடம் கதை கேட்டபோதும் அந்த கதைகளில் நடிப்பது குறித்து அவர் இன்னும் பதில் சொல்லவில்லை. இந்த வேளையில், சிலர் அவருக்கு போன் செய்து இப்போது படப்பிடிப்பே இல்லாமல் ஓய்வாகத்தானே இருக்கிறீர்கள்.

எங்கள் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு எங்களை வாழ்த்த வாருங்கள் என்கிறார்களாம். அதற்கு, படப்பிடிப்பு இல்லாமல் நான் ஓய்வாக இருக்கேன்னு யார் சொன்னது. இப்பவும் நான் பிசிதான்.

சினிமாவில் நடிக்க வந்தபிறகு நான் படிச்சு தெரிய வேண்டிய நிறைய விசயங்களை கிடப்பில் போட்டுட்டேன். அதை இப்ப சீரியசா படிச்சிக்கிட்டு இருக்கேன். அதனால் அதை விட்டுட்டு என்னால யாரையும் வாழ்த்த வர முடியாது. அந்த அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆளும் இல்லை என்று கூறி விட்டாராம் லட்சுமிமேனன்.

 


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions