பிளஸ் 2 தேர்வில், லட்சுமி மேனன் பாஸ் ஆயிட்டார்!

Bookmark and Share

பிளஸ் 2 தேர்வில், லட்சுமி மேனன் பாஸ் ஆயிட்டார்!

நடிகை லட்சுமி மேனன் பிளஸ் 2 தேர்வில் 72 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பாஸாகிவிட்டார். கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானாவர் நடிகை லட்சுமி மேனன்.

9 வது படிக்கும்போதே ஹீரோயினாக நடித்த லட்சுமி மேனன், தொடர்ந்து சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, மஞ்சப்பை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துவிட்டார்.

கடைசியாக தமிழில் அவர் நடித்த கொம்பன் படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்தது. லட்சுமி மேனன், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினார். இதனால் கொம்பன் படத்தை முடித்த கையோடு சினிமாவுக்கு கொஞ்ச காலம் பிரேக் விட்டு புத்தகமும் கையுமாக அழைந்தார்.

லட்சுமி மேனன் பிளஸ் 2வில், சிபிஎஸ்இ., பாடப்பரிவில், வணிகவியல் குரூப் எடுத்திருந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் தேர்வு எழுதிய லட்சுமி மேனனுக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின.

அதில் லட்சுமி மேனன் 72 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பாஸாகியுள்ளார். இந்த தகவலை லட்சுமி மேனனின் அம்மா நம்மோடு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

தொடர்ந்து லட்சுமி மேனன் மேற்படிப்பு படிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, கடந்த இருவாரங்களுக்கு முன்னர் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானபோது லட்சுமி மேனன், பெயிலாகிவிட்டதாக தகவல் பரவியது, பின்னர் அந்த செய்தி தவறானது என்பது பின்னர் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions